Posts

Showing posts from December, 2020

இன்றைய காந்திகள்

புத்தகம்: இன்றைய காந்திகள்  ஆசிரியர்: பாலசுப்பிரமணியம் முத்துசாமி.  முன்குறிப்பு: காந்தியை பிடிக்காதவர்களுக்கும் இந்த புத்தகம் பிடிக்கும்.   அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் 58 வயதில் அரவிந்த் கண் மருத்துவமனையில் குழுமத்தை உருவாக்க டாக்டர் வெங்கடசாமியை உந்தித் தள்ளியது எதுவோ,    அமெரிக்கா செல்லவிருந்த வர்கீஸ் குரியனை சாலைகளே இல்லாத கிராமங்களில் கூட்டுறவு பால் பண்ணைகளை அமைத்து அமுல் நிறுவனத்தை உருவாக்க செய்தது எதுவோ, அரசின் வறண்ட நிலப் பகுதியாக இருந்த இடத்தில் வற்றாத ஏரியை உருவாக்க ராஜேந்திர சிங்கை உழைக்கச் செய்தது எதுவோ, ஜான் ட்ரெஸை பெல்ஜியத்தின் குடியுரிமையை துறந்து இந்தியக் குடியுரிமை பெற்று இந்தியாவின் சேரிகளில் வாழச் செய்து, லண்டனில் பொருளியல் படித்து விட்டு இந்தியாவில் வந்து சம்பளம் வாங்காமல் பேராசிரியராக இருக்க உந்தியது எதுவோ, பங்கர் ராயை வெறும்பாத கல்லூரியை ஆரம்பிக்கச் செய்து, கிராமத்து வயது முதிர்ந்த பெண்களைக் கிராமத்தின் மின்சார சுய தேவையை நிவர்த்தி செய்யும் தலைவிகளாக உலகெங்கும் உருவாக்கியது எதுவோ, அருணாராய் ஐ ஆட்சிப் பணியை உதற செய்து உழைக்கும் மக்...