Posts

Showing posts from July, 2022

ஜென்னி மார்க்ஸ்

புத்தகம்: ஜென்னி மார்க்ஸ் ஆசிரியர்:என்.ராமகிருஷ்ணன் பிள்ளை பசியில் பாலென்று உரியா மார்பத்தின் மேல் தோல் உரித்து பிள்ளையின் வாயெல்லாம் இரத்தம் அன்றைய தினம் வீட்டிலிருந்த பொருட்களையும் கடன்காரர்கள்  தூக்கி சென்ற நிலையில் தன் தோழிக்கு கடிதம் எழுதுகிறாள் நான் அதிஷ்டசாளி அன்பான கணவர் என் அருகில் இருப்பதால்... என்று எவ்வளவு துன்பம் அனுபவித்த பின்பும் அரசகுடும்பத்தில் பிறந்து அன்றாடகாச்சியை மணந்ததை பாக்கியமாகவே கருதினார்.இப்படி கடைசிவரை சாகும் நொடிவரை குறையாத நேசத்தோடு காதலிக்க முடியுமா என்பது பெரும் வியப்பே!....என்றும் நான் வியக்கும் பெண்...! எங்கெல்சும், ஜென்னியும் இல்லையென்றால் நிச்சயம் மார்க்ஸ் கிடைத்திருக்கமாட்டார்.நட்பை ,காதலை, வறுமையை, வலியை, நேர்மையை, கொள்கைபிடிப்பை, பிடிவாதத்தை சொல்லிகொடுக்கும் நூல்.

பறக்கும் ஹேர்கிளிப்

 புத்தகம்:#பறக்கும்_ஹேர்_க்ளிப்  ஆசிரியர்:விஜயபாஸ்கர விஜய் குழந்தைகளுக்கான புத்தகம் என்று எளிதாக கடந்துவிட இயலாது ஒவ்வொருகதையிலும் வித்தியாசமான உத்திகள் உதாரணமாக 'தயங்காதே' கதை   ஒரே நேரத்தில் நடக்கும் இரு நிகழ்வுகளை கொண்டு அப்பா மகள் இருவரும் பாடம்கற்பதாய் அமைகிறது .              'பேனா பெண்' எளிமைபடுத்தபட்ட வரலாற்றுக்கதையாய்....  'பறக்கும் ஹேர்கிளிப்' கதையில் முடிவை குழந்தையின் வசமே விடும் யுத்தி                     ‎'சூரியனும் குட்டிபெண்ணும்':: கதையெல்லாம் முற்றிலும் குழந்தைகள் உலகில் குழந்தையாய் நின்று எழுதப்பட்டிருக்கிறது . பெரியவர்களையும் பின்னனோக்கி கூட்டிசெல்லும் மறுபட்ட கதை.   இப்படி இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொருகதையும் ஒவ்வொருபாணியில் அமைந்திருப்பதோடு அரைத்தமாவையே அரைக்காமல் ஆசிரியர் இன்றைய சமகாலத்தில் குழந்தைகளுக்கு தேவையான அவசியமான விசயங்களை எளிமையாக பேசியிருக்கிறார்             ‎பொதுவாக அக்கா குழந்தைகள் மற்றும் பக்கத்துவிட்டு தம...

இரவு மிருகம்

புத்தகம்: இரவு மிருகம் ஆசிரியர்:சுகிர்தராணி என்னதான் தாய்வழிச் சமூகம், ஆதிதாய் இனக்குழுக்களின் தலைவி என்றெல்லாம் பேசினாலும்,மொழி என்றும் பெண்ணின் உடைமையாய் இருந்ததில்லை. ஆணாதிக்கச் சமூகத்தால் தயாரிக்கப்பட்ட மூக்குக் கண்ணாடிகளை அணிந்து கொண்ட பின் பெண்ணுக்கே பெண் அந்நியமானவளாகவும் ஆபாசமானவளாகவுமே தெரிகிறாள். இப்படியான பொய்புனைவுதிரைகளை கிழித்துக் கொண்டு பெண்ணை பெண்ணாக பார்க்கும் வரத்தை தரவல்ல கவிதைகளால் நிறைந்திருக்கிறது  பெண்கவி.சுகிர்தராணி அவர்களின்  #இரவு_மிருகம் புத்தகம். இந்த வாசிப்பு பயணம் பெண்கவியின் குரலை மறந்து கட்டவிழ்ந்த என் நாக்கு உதிர்த்த வரிகள் இவை என்னும் உணர்வை பெண்களுக்கும், வித்தியாசமான வாசிப்பனுபவத்தை ஆண்களுக்கும் வழங்கும். வலுவான உவமைகளால் வன்மையாய் உண்மை பேசும் சிறிய கவிதை புத்தகம். அவசியம் படியுங்கள்.

தூப்புக்காரி

புத்தகம் :தூப்புக்காரி  ஆசிரியர்: மலர்வதி ஒரு தனியார் மருத்துவமனையில் தூப்புகாரியாக பணிபுரியும் 35 வயதில் கணவனை இழந்த விதவை கனகம் அவளுக்கு திருமணம் ஆகும் வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.எப்படியும் தன் மகளை இந்த வேலைக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கனகம் எண்ணுகிறாள் மகளும் கூட இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்.வேண்டாம் என்று ஓடினாலும் வாழ்க்கைசூழல் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த தலைமுறையை எப்படி தூப்புக்கார்களாகவே மாற்றுகிறது என்பதை பேசக்கூடிய புத்தகம். நாம் பயன்படுத்தக்கூடிய இடங்களைச் சுத்தம் செய்து பளபளவென ஆக்குபவர்கள் தன் வாழ்வில் ஒளியிழந்து பளபளப்பு இழந்து நலிவுறுவதை நாம் என்றும் கண்டு கொள்வதே இல்லை என்கின்ற உண்மை முகத்தில் அரைகிறது.  எப்பொழுதும் பொதுக் கழிவறையில் காய்ந்துபோன மலம், சாக்கடை நாத்தம்,மருத்துவமனை கழிவுகளை அப்புறப்படுத்துதல் என தொடர்ந்து ஒரு நாளின் பெரும்பான்மை நேரத்தைக் கழிப்பதால் கை கால்களில் ஏற்படும் தோல் நோய்கள், வறுமை, அவர்கள் செய்யும் தொழிலின் பொருட்டு சமூகத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் இழிவான பெயர், அவமரியாதை என்று மு...