Posts

Showing posts from 2022

அர்த்தம் உள்ள இந்து மதம் 5ஆம் பாகம் ஞானம் பிறந்த கதை

புத்தகம்: அர்த்தம் உள்ள இந்து மதம் 5ம் பாகம் ஞானம் பிறந்த கதை ஆசிரியர்:கண்ணதாசன் நன்கு கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க சிந்தனை நிறைந்த புத்தகம் படி படியாய் பல நிலைகளில் ஞானம் கிடைக்கிறது அதில் உட்சபட்ட  ஞானம் என்னவென்றால் சிவனின் மனைவி உட்பட உலகில் அனைத்து பெண்களும் இரட்டை மனம் கொண்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்வதாம். நல்ல மனைவி அமையாதவர்கள் சன்னியாசி ஆக வேண்டுமாம்😑🐒

ஜென்னி மார்க்ஸ்

புத்தகம்: ஜென்னி மார்க்ஸ் ஆசிரியர்:என்.ராமகிருஷ்ணன் பிள்ளை பசியில் பாலென்று உரியா மார்பத்தின் மேல் தோல் உரித்து பிள்ளையின் வாயெல்லாம் இரத்தம் அன்றைய தினம் வீட்டிலிருந்த பொருட்களையும் கடன்காரர்கள்  தூக்கி சென்ற நிலையில் தன் தோழிக்கு கடிதம் எழுதுகிறாள் நான் அதிஷ்டசாளி அன்பான கணவர் என் அருகில் இருப்பதால்... என்று எவ்வளவு துன்பம் அனுபவித்த பின்பும் அரசகுடும்பத்தில் பிறந்து அன்றாடகாச்சியை மணந்ததை பாக்கியமாகவே கருதினார்.இப்படி கடைசிவரை சாகும் நொடிவரை குறையாத நேசத்தோடு காதலிக்க முடியுமா என்பது பெரும் வியப்பே!....என்றும் நான் வியக்கும் பெண்...! எங்கெல்சும், ஜென்னியும் இல்லையென்றால் நிச்சயம் மார்க்ஸ் கிடைத்திருக்கமாட்டார்.நட்பை ,காதலை, வறுமையை, வலியை, நேர்மையை, கொள்கைபிடிப்பை, பிடிவாதத்தை சொல்லிகொடுக்கும் நூல்.

பறக்கும் ஹேர்கிளிப்

 புத்தகம்:#பறக்கும்_ஹேர்_க்ளிப்  ஆசிரியர்:விஜயபாஸ்கர விஜய் குழந்தைகளுக்கான புத்தகம் என்று எளிதாக கடந்துவிட இயலாது ஒவ்வொருகதையிலும் வித்தியாசமான உத்திகள் உதாரணமாக 'தயங்காதே' கதை   ஒரே நேரத்தில் நடக்கும் இரு நிகழ்வுகளை கொண்டு அப்பா மகள் இருவரும் பாடம்கற்பதாய் அமைகிறது .              'பேனா பெண்' எளிமைபடுத்தபட்ட வரலாற்றுக்கதையாய்....  'பறக்கும் ஹேர்கிளிப்' கதையில் முடிவை குழந்தையின் வசமே விடும் யுத்தி                     ‎'சூரியனும் குட்டிபெண்ணும்':: கதையெல்லாம் முற்றிலும் குழந்தைகள் உலகில் குழந்தையாய் நின்று எழுதப்பட்டிருக்கிறது . பெரியவர்களையும் பின்னனோக்கி கூட்டிசெல்லும் மறுபட்ட கதை.   இப்படி இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொருகதையும் ஒவ்வொருபாணியில் அமைந்திருப்பதோடு அரைத்தமாவையே அரைக்காமல் ஆசிரியர் இன்றைய சமகாலத்தில் குழந்தைகளுக்கு தேவையான அவசியமான விசயங்களை எளிமையாக பேசியிருக்கிறார்             ‎பொதுவாக அக்கா குழந்தைகள் மற்றும் பக்கத்துவிட்டு தம...

இரவு மிருகம்

புத்தகம்: இரவு மிருகம் ஆசிரியர்:சுகிர்தராணி என்னதான் தாய்வழிச் சமூகம், ஆதிதாய் இனக்குழுக்களின் தலைவி என்றெல்லாம் பேசினாலும்,மொழி என்றும் பெண்ணின் உடைமையாய் இருந்ததில்லை. ஆணாதிக்கச் சமூகத்தால் தயாரிக்கப்பட்ட மூக்குக் கண்ணாடிகளை அணிந்து கொண்ட பின் பெண்ணுக்கே பெண் அந்நியமானவளாகவும் ஆபாசமானவளாகவுமே தெரிகிறாள். இப்படியான பொய்புனைவுதிரைகளை கிழித்துக் கொண்டு பெண்ணை பெண்ணாக பார்க்கும் வரத்தை தரவல்ல கவிதைகளால் நிறைந்திருக்கிறது  பெண்கவி.சுகிர்தராணி அவர்களின்  #இரவு_மிருகம் புத்தகம். இந்த வாசிப்பு பயணம் பெண்கவியின் குரலை மறந்து கட்டவிழ்ந்த என் நாக்கு உதிர்த்த வரிகள் இவை என்னும் உணர்வை பெண்களுக்கும், வித்தியாசமான வாசிப்பனுபவத்தை ஆண்களுக்கும் வழங்கும். வலுவான உவமைகளால் வன்மையாய் உண்மை பேசும் சிறிய கவிதை புத்தகம். அவசியம் படியுங்கள்.

தூப்புக்காரி

புத்தகம் :தூப்புக்காரி  ஆசிரியர்: மலர்வதி ஒரு தனியார் மருத்துவமனையில் தூப்புகாரியாக பணிபுரியும் 35 வயதில் கணவனை இழந்த விதவை கனகம் அவளுக்கு திருமணம் ஆகும் வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.எப்படியும் தன் மகளை இந்த வேலைக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கனகம் எண்ணுகிறாள் மகளும் கூட இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்.வேண்டாம் என்று ஓடினாலும் வாழ்க்கைசூழல் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த தலைமுறையை எப்படி தூப்புக்கார்களாகவே மாற்றுகிறது என்பதை பேசக்கூடிய புத்தகம். நாம் பயன்படுத்தக்கூடிய இடங்களைச் சுத்தம் செய்து பளபளவென ஆக்குபவர்கள் தன் வாழ்வில் ஒளியிழந்து பளபளப்பு இழந்து நலிவுறுவதை நாம் என்றும் கண்டு கொள்வதே இல்லை என்கின்ற உண்மை முகத்தில் அரைகிறது.  எப்பொழுதும் பொதுக் கழிவறையில் காய்ந்துபோன மலம், சாக்கடை நாத்தம்,மருத்துவமனை கழிவுகளை அப்புறப்படுத்துதல் என தொடர்ந்து ஒரு நாளின் பெரும்பான்மை நேரத்தைக் கழிப்பதால் கை கால்களில் ஏற்படும் தோல் நோய்கள், வறுமை, அவர்கள் செய்யும் தொழிலின் பொருட்டு சமூகத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் இழிவான பெயர், அவமரியாதை என்று மு...

மீன்கள் உறங்கும் குளம்

புத்தகம்:மீன்கள் உறங்கும் குளம்  ஆசிரியர்: பிருந்தா சாரதி  மீன்கள் உறங்கும் குளம்  விண்மீன்களை ரசித்தபடி  தூண்டில் காரன் **** தண்ணீர் லாரி தளும்புகிறது  பாலத்தின் கீழே  வறண்ட ஆறு ****  புள்ளி வைத்து முடிப்பதற்குள்  கலைத்து விடுகிறது காற்று  வெப்பம் பூக்கோலம் மூன்று வரி கவிதைகள் அடங்கிய சிறிய புத்தகம் பக்கங்கள் :126 விலை:100 பதிப்பு:டிஸ்கவரி புக் பேலஸ்

குழந்தை வளர்ப்பும் நலனும்

புத்தகம் : குழந்தை வளர்ப்பும் நலனும் குழந்தைகள் வளர்ப்பு குறித்த புத்தகங்கள் தமிழில் வாசிக்க கிடைப்பது அரிது சில மேலைநாட்டு பிரபல எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வாங்கிப் படித்தால் நீங்கள் இதுவரை படித்த கேட்ட தமிழை மறந்து விடும் அளவிற்கு இருக்கும் என்கின்ற சூழ்நிலையில் "குழந்தை வளர்ப்பும் நலனும்" என்கின்ற மருத்துவர் ப.வைத்தியலிங்கம் அவர்களின் இந்த நூல் மிகவும் முக்கியமானது. குழந்தை பெற்றுக்கொள்கிற அல்லது பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் தொடங்கி குழந்தைகளுக்கு வீட்டில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகள் வரை அனைத்தையும் அலசும் முப்பத்திமூன்று கட்டுரைகளின் தொகுப்பாக இந்த புத்தகம் விளங்குகிறது.  குழந்தை இந்த உலகத்தை அடைந்தவுடன் முதல் முதலில் அது சந்திக்கும் டெம்பரேச்சர் சாக் முதல் அதன் உடலின் மேல் பூசப்பட்டிருக்கும் வெள்ளை நிற வெர்னிக்ஸ் மாவு, Foremilk,Hindmilk தாய்பாலில் அடுத்தடுத்த மணிநேரங்களில் சுரக்கும் இருவகை பால் பற்றி பேசி, தாய்ப்பால் ஊட்டுவதில் தாய்மார்களுக்கு உள்ள பிரச்சனைகள், தாய்மார்களுக்கு எந்தெந...

கடைசி_மழைத்துளி

புத்தகம்: கடைசி மழைத்துளி ஆசிரியர்:அறிவுமதி மரக்கிளையில் குழந்தை  வரப்பில் பண்ணையார்  பயிரில் சிந்துகிறது பால்  ~~~| விடிந்துவிடு இரவே விழித்திருக்கிறான் கூர்க்கா ~~~ அகதி முகாம்  மலையில் வருகிறது  மண்வாசனை   ~~~ பெற்றெடுக்கிறாளா பிறக்கவே இல்லை  இன்னும் பெண் ~~~ வீட்டுக்குள் குரோட்டன்சுகள் தொட்டிக்குள் மீன்கள்  வானம் தொலைந்த நகரம் ~~~ கிளை கிடைக்காத சோகம் அமர்ந்தது புறா  கல்லறைச் சிலுவை ~~~ பசிக்கு தாய்ப்பால் அருந்துபவர்களாக இல்லாமல் தாயின் முலையையே அறுத்து உண்ணும் அளவிற்கு சுயநலமும் கொடூரமும் நிறைந்ததாக மாறிப்போன வாழ்வியலை போர்களை அரசியலை சாடும் விதமாகவும் இயற்கையை, மனிதத்தை கொண்டாடும் விதமாகவும் இந்த புத்தகம் அமைந்துள்ளது. இதற்கு முன்னுரை வழங்கியுள்ள வண்ணதாசன் அவர்களும் காசிஆனந்தன் அவர்களும் முன்னுரையையே ஒரு சிறு கவிதை தொகுப்பில் போல வித்தியாசமாக எழுதி இருக்கிறார்கள். இறுதியாகப் புத்தகல்தில் இணைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் பற்றிய அறிவுமதி அவர்களின் உரைநடை காலக்கடலில் கரைந்து போகாத உறைநிலைப்படுத்தப்பட்ட தமிழீழ மக்களின் துன்பியல் வரலாற்ற...

முட்டு வீடு

புத்தகம்: முட்டு வீடு ஆசிரியர்: தமிழச்சி தங்கபாண்டியன்  முட்டு வீடு என்பது புதிதாக குழந்தை பிறந்து 30நாள் நிறைவடையாத வீட்டைக் குறிக்கக் கூடியதுசொல் கிராமிய நடையில் அமைந்த எளிமையான வாழ்வியலைச் சித்தரிக்கும்  ஐந்து சிறுகதைகளை கொண்ட நூல். ஏதோ ஒரு கிராமத்து நபருடன் பேசிக்கொண்டே நடப்பதைப் போன்ற உணர்வை புத்தகம் முழுதும் உணரமுடிகிறது. பெண்ணின் மொழியில் கிராமத்து வாழ்வில் இருக்கும் பழமைவாத கருத்துக்களை எதிர்த்து கேள்வி எழுப்பும் விதமாக இருந்தாலும் எந்தவித ஆரவாரமும் அற்று வெகுஇயல்பாய் கதையின் போக்கு அவ்வாறு அமைந்திருப்பது சிறப்பு. உயிர்மெய் பதிப்பகம் விலை:₹60