அக்காளின் எலும்புகள்

அக்காளின் எலும்புகள் கவிதை தொகுப்பு வெறும் அக்காவின் எலும்பு மச்சை வடிந்த மை கொண்டு எழுதப்பட்டதல்ல நூற்றாண்டு காலமாக மென்னி நெறிக்கப்பட்ட பெண்ணை ஏறெடுத்து பார்க்கும் ஆணின் நெற்றி நீவல். நிகழ்வுகளை நிகழ்வுகளாக காட்டும் தீர்ப்பிட தெரியாத நீர் பிம்பம்.
      ஆதிதாயிடம் இடைக்கால அநீதிகளை பேசித் தீர்க்க முடியாமல் ஏக்கமாய் பார்க்கும் கடைக்குட்டியின் பாவமன்னிப்பு முத்தம்
         கிராமிய வழக்காறுகளுடன் பின் நவீனத்துவ கவிதை படிக்க வெய்யிலை தவிர வேறுயாரை தஞ்சம் அடைவது.
         ‎வாசித்து முடித்த பின்னும் அட்டையென சிந்தையுறிஞ்சுகிறது  அக்காளின் எலும்புகள்.

புத்தகம்:அக்காளின் எலுப்புகள்
கவிஞர்:வெய்யில்
பதிப்பகம்:கொம்பு
விலை:75

Comments

Popular posts from this blog

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை