பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை



புத்தகம் :பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை 
ஆசிரியர்: வீரசோழன் க.சோ. திருமாவளவன் 
படைப்பு பதிப்பகம்
பக்கங்கள்:110
விலை:100

மண் மனம் மாறாத கிராமத்து வாழ்வியலின் உறைநிலை இந்த கவிதை தொகுப்பு.

 பக்கங்கள் தோறும் எலுமிச்சை பழங்களின் நறுமணமும் முருங்கைக் கீரையின் பச்சையமும் தாத்தா பூனைக்கு வைக்கும் தயிர் சாதத்தின் மனமும் கோலிகுண்டுகளாய் உருண்டோடுகின்றன .கரிசல் காட்டை சுற்றி காட்டி கடைசியில் யமுனை ஆற்றங்கரையில் கண்ணீரோடு நம்மை நிற்க வைக்கிறார் ஆசிரியர்.
 
 பருத்தியை வெண் குங்குமம் என்கிறார் மெய்ப்பனின் முத்தத்தை கசாப்பு கடைக்காரன் ஒருபோதும் அறிந்ததில்லை என்கிறார் தேநீர் கடைக்காரனை சுவைஞானி என்கிறார் மழைத்துளியை உயிர் உருண்டை என்கிறார்.
 
| பூனைகள் பாதகம் ஏற்படுத்தாத பசு| 

|ஆலமரத்தின் விழுதுகளில் தூரிஆடும் குழந்தைக்கு ஏற்றவரே காற்றில் தன்னை இழகுபடுத்தும்|

வாழ்வை புரட்டி போட்ட நுண்கிருமி சொந்த ஊரில் உயிரை விட கையில் ஏந்தி செல்கிறது கல்லறையை 

செதுக்கி இருக்கும் புத்தனை
 தீண்டுவதே இல்லை சிற்பி 
 
பூத்தே இருக்கும் ஏக்கங்களுக்கு அறுவடை அற்ற நிலம் ஆறுதலாய் இருக்கிறது 

ஆவணங்கள் பேசுவதை ஆணிகள் தாங்குகின்றன ஆணிகள் சுவரில் காலத்தை பதியம் செய்கின்றன

இப்படி சட்டென மனதில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொள்ளும் வரிகளால் வனைந்த புத்தகம்

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா