அப்பத்தா
புத்தகம் :அப்பத்தா சிறுகதைகள்
ஆசிரியர்:பாரதி கிருஷ்ணகுமார்
The Roots வெளியீடு
விலை:100
பக்கங்கள்:97
கிராமத்து வாழ்வியலின் வெவ்வேறு அனுபவங்களை வேறுபட்ட மனித கதாபாத்திரங்களின் வழியாக பேசுகிறது இந்த புத்தகம்.
மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன அவற்றின் பெரும்பாலான கதைகளின் கதாபாத்திரங்களோடு சிறிது நேரம் பயணித்தில் ஏற்பட்ட பிணைப்பு அவர்களோடு நீண்ட நேரம் பயணிக்க வேண்டும் என்கின்ற ஆவலை ஏற்படுத்துகிறது.
நாவலாக படிக்க கிடைக்காதா என்று ஏங்கும் வண்ணம் கதைக்கு பின் என்ன ஆனதோ என்னும் ஆவலையும் ஏக்கத்தையும்பல கதைகள் உருவாக்குகின்றன குறிப்பாக அப்பத்தா கதை இந்த அனைத்து கதைகளிலும் முத்தாய்ப்பாய் விளங்குகிறது இன்னும் ஊத்து, கோடி, லுங்கி எல்லாம் மறக்க முடியாத கதைகள்.
எளிமையான எழுத்து நடையில் வழவழவென்று இழுக்காமல் சொற்ப வார்த்தைகளில் எழுதப்பட்டுள்ள இந்த கதை பேசாமல் விட்டிருக்கும் மௌனங்கள் கூட அதிகமா நம்மை சிந்திக்க வைக்கின்றன.
ஏதோ ஒரு வாசிப்பு போட்டி போல கடகடவென்று எடுத்து இந்த பத்து கதைகளையும் முழுமூச்சில் படித்துவிட்டு வைத்து விட முடியாது. ஒவ்வொரு கதையும் நம்மோடு ஒரு உரையாடலை நிகழ்த்துகிறது ஒரு வாழ்வியலை பேசுகிறது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது அதில் இருந்து மீண்டு வந்து இன்னொரு அனுபவத்திற்குள் செல்வதற்கு நேரம் எடுக்கிறது .
#அப்பத்தா 2011 ஆம் ஆண்டு ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது இந்த புத்தகத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு சுகமான வாசிப்பு அனுபவம்
Comments
Post a Comment