#நீ _எழுத_மறுக்கும்_எனதழகு
#நீ _எழுத_மறுக்கும்_எனதழகு
என்னும் கவிதை புத்தகம் கவிஞர் இளம்பிறை அவர்களின் ஐந்து கவிதை தொகுப்புகள் மற்றும் 2005 க்கு பின் அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு ஆகும்.
கிராமியம் என்பது கிராமத்து பேச்சுமொழியில் எழுவது என திரிந்து போன இக்காலத்தில் தங்கதட்டுக்கு வெள்ளி சுரையணியும் ஒருத்தி, ரோட்டில் அடிபட்டுசெத்துப் போன ஆட்டை எண்ணி கதரும் கறுப்பி,கன்று பற்றி கவலையற்று மாட்டின் மடிபார்க்கும் வியாபாரிகள், சாம்பல் கலந்த பூனாச்சி விதைகள்,திண்ணையில் படுக்க அனுமதிக்கப்படாத பெண் பிள்ளைகள் என கிரமத்து வாழ்வின் நுண்மைகளோடு தன் எழுத்துக்களால் ஊடாடுகிறார்.
"சேறு அரித்து
சிவந்திருக்கும் கருங்கால்கள்....
எனது அழகுகள் எல்லாம்
இதுவரை தெரிந்ததில்லை
உன் எழுத்து விழிகளுக்கு.
என் வாழ்க்கைக்குள் வந்ததில்லை
உனது கேமராக்கள்.
குறைந்தபட்சம்
அழகுப்போட்டிகள் நடத்தி
என்னைப் பழித்துக்காட்டாமல்
இருக்கக்கூட
நினைப்பதில்லை நீங்கள்."
மேலும் வேலைக்குச்செல்லும் பெண்மீதான இரட்டை சுவை,அவர்களின் பிரச்சனைகள்
கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு புலம் பெயர்ந்தவர்களின் உணர்வுகள் பெண்ணின் சுதந்திர வேட்கை உறவுகள் மீதான அவர்களின் பார்வை என நம் காலத்தின் பிரதிபலிப்பாய் சமகாலத்தின் வாழ்வரசியலாய் பக்கங்கள் தோறும்
நம்மைக்காட்டும் கண்ணாடியாய் நிற்கின்றன இளம்பிறையின் கவிதைகள்.
பக்கங்கள்:247
பதிப்பகம்:டிஸ்கவரி புக் பேலஸ்
விலை:230
Comments
Post a Comment