புத்தகம் : குழந்தை வளர்ப்பும் நலனும் குழந்தைகள் வளர்ப்பு குறித்த புத்தகங்கள் தமிழில் வாசிக்க கிடைப்பது அரிது சில மேலைநாட்டு பிரபல எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வாங்கிப் படித்தால் நீங்கள் இதுவரை படித்த கேட்ட தமிழை மறந்து விடும் அளவிற்கு இருக்கும் என்கின்ற சூழ்நிலையில் "குழந்தை வளர்ப்பும் நலனும்" என்கின்ற மருத்துவர் ப.வைத்தியலிங்கம் அவர்களின் இந்த நூல் மிகவும் முக்கியமானது. குழந்தை பெற்றுக்கொள்கிற அல்லது பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் தொடங்கி குழந்தைகளுக்கு வீட்டில் ஏற்படும் எதிர்பாராத விபத்துகள் வரை அனைத்தையும் அலசும் முப்பத்திமூன்று கட்டுரைகளின் தொகுப்பாக இந்த புத்தகம் விளங்குகிறது. குழந்தை இந்த உலகத்தை அடைந்தவுடன் முதல் முதலில் அது சந்திக்கும் டெம்பரேச்சர் சாக் முதல் அதன் உடலின் மேல் பூசப்பட்டிருக்கும் வெள்ளை நிற வெர்னிக்ஸ் மாவு, Foremilk,Hindmilk தாய்பாலில் அடுத்தடுத்த மணிநேரங்களில் சுரக்கும் இருவகை பால் பற்றி பேசி, தாய்ப்பால் ஊட்டுவதில் தாய்மார்களுக்கு உள்ள பிரச்சனைகள், தாய்மார்களுக்கு எந்தெந...