கடைசி_மழைத்துளி

புத்தகம்: கடைசி மழைத்துளி
ஆசிரியர்:அறிவுமதி

மரக்கிளையில் குழந்தை 
வரப்பில் பண்ணையார் 
பயிரில் சிந்துகிறது பால் 
~~~|
விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா
~~~
அகதி முகாம் 
மலையில் வருகிறது
 மண்வாசனை 
 ~~~
பெற்றெடுக்கிறாளா
பிறக்கவே இல்லை 
இன்னும் பெண்
~~~
வீட்டுக்குள் குரோட்டன்சுகள்
தொட்டிக்குள் மீன்கள் 
வானம் தொலைந்த நகரம்
~~~
கிளை கிடைக்காத சோகம்
அமர்ந்தது புறா 
கல்லறைச் சிலுவை
~~~
பசிக்கு தாய்ப்பால் அருந்துபவர்களாக இல்லாமல் தாயின் முலையையே அறுத்து உண்ணும் அளவிற்கு சுயநலமும் கொடூரமும் நிறைந்ததாக மாறிப்போன வாழ்வியலை போர்களை அரசியலை சாடும் விதமாகவும் இயற்கையை, மனிதத்தை கொண்டாடும் விதமாகவும் இந்த புத்தகம் அமைந்துள்ளது.

இதற்கு முன்னுரை வழங்கியுள்ள வண்ணதாசன் அவர்களும் காசிஆனந்தன் அவர்களும் முன்னுரையையே ஒரு சிறு கவிதை தொகுப்பில் போல வித்தியாசமாக எழுதி இருக்கிறார்கள்.

இறுதியாகப் புத்தகல்தில் இணைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் பற்றிய அறிவுமதி அவர்களின் உரைநடை காலக்கடலில் கரைந்து போகாத உறைநிலைப்படுத்தப்பட்ட தமிழீழ மக்களின் துன்பியல் வரலாற்றின் முக்கிய சான்றாக விளங்குகிறது.
 
 பக்கம்:80
 விலை:50
 பதிப்பகம்:கவிதா பப்ளிகேசன்

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை