ஜென்னி மார்க்ஸ்
புத்தகம்: ஜென்னி மார்க்ஸ்
ஆசிரியர்:என்.ராமகிருஷ்ணன்
பிள்ளை பசியில் பாலென்று உரியா மார்பத்தின் மேல் தோல் உரித்து பிள்ளையின் வாயெல்லாம் இரத்தம்
அன்றைய தினம் வீட்டிலிருந்த பொருட்களையும் கடன்காரர்கள் தூக்கி சென்ற நிலையில் தன் தோழிக்கு கடிதம் எழுதுகிறாள் நான் அதிஷ்டசாளி அன்பான கணவர் என் அருகில் இருப்பதால்... என்று எவ்வளவு துன்பம் அனுபவித்த பின்பும் அரசகுடும்பத்தில் பிறந்து அன்றாடகாச்சியை மணந்ததை பாக்கியமாகவே கருதினார்.இப்படி கடைசிவரை சாகும் நொடிவரை குறையாத நேசத்தோடு காதலிக்க முடியுமா என்பது பெரும் வியப்பே!....என்றும் நான் வியக்கும் பெண்...!
எங்கெல்சும், ஜென்னியும் இல்லையென்றால் நிச்சயம் மார்க்ஸ் கிடைத்திருக்கமாட்டார்.நட்பை ,காதலை, வறுமையை, வலியை, நேர்மையை, கொள்கைபிடிப்பை, பிடிவாதத்தை சொல்லிகொடுக்கும் நூல்.
Comments
Post a Comment