பறக்கும் ஹேர்கிளிப்
புத்தகம்:#பறக்கும்_ஹேர்_க்ளிப்
ஆசிரியர்:விஜயபாஸ்கர விஜய்
குழந்தைகளுக்கான புத்தகம் என்று எளிதாக கடந்துவிட இயலாது ஒவ்வொருகதையிலும் வித்தியாசமான உத்திகள் உதாரணமாக 'தயங்காதே' கதை
ஒரே நேரத்தில் நடக்கும் இரு நிகழ்வுகளை கொண்டு அப்பா மகள் இருவரும் பாடம்கற்பதாய் அமைகிறது .
'பேனா பெண்' எளிமைபடுத்தபட்ட வரலாற்றுக்கதையாய்....
'பறக்கும் ஹேர்கிளிப்' கதையில் முடிவை குழந்தையின் வசமே விடும் யுத்தி
'சூரியனும் குட்டிபெண்ணும்':: கதையெல்லாம் முற்றிலும் குழந்தைகள் உலகில் குழந்தையாய் நின்று எழுதப்பட்டிருக்கிறது . பெரியவர்களையும் பின்னனோக்கி கூட்டிசெல்லும் மறுபட்ட கதை.
இப்படி இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொருகதையும் ஒவ்வொருபாணியில் அமைந்திருப்பதோடு அரைத்தமாவையே அரைக்காமல் ஆசிரியர் இன்றைய சமகாலத்தில் குழந்தைகளுக்கு தேவையான அவசியமான விசயங்களை எளிமையாக பேசியிருக்கிறார்
பொதுவாக அக்கா குழந்தைகள் மற்றும் பக்கத்துவிட்டு தம்பிக்கொல்லாம் கதை சொல்வதுண்டு குழந்தைகளை சேட்டைசெய்யவிடாமல் ஒரு இடத்தில் உக்காரவைக்கும் கருவியாக மட்டும் கதை கூறுவதை பலநேரங்களில் பயன்படுத்திய எனக்கு இந்த புத்தம் கதைகளின் மூலம் எப்படியெல்லாம் குழந்தைகளின் சிந்தனையை தூண்டலாம் என கற்றுத்தந்திருக்கிறது.
சமூக அக்கறையுடன் கூடிய அதிசிறத்தையான குழந்தைகள் இலக்கிய படைப்பு இந்த நூல்.
இதில் பெரியவர்களுக்கும் கற்றுக்கொள்ள பலவிசயங்கள் இருந்ததால் இந்த புத்தகத்தை அனைத்து வயதினருமே படிக்கலாம்.
Comments
Post a Comment