இரவு மிருகம்
புத்தகம்: இரவு மிருகம்
ஆசிரியர்:சுகிர்தராணி
என்னதான் தாய்வழிச்
சமூகம், ஆதிதாய் இனக்குழுக்களின் தலைவி என்றெல்லாம் பேசினாலும்,மொழி என்றும் பெண்ணின் உடைமையாய் இருந்ததில்லை. ஆணாதிக்கச் சமூகத்தால் தயாரிக்கப்பட்ட மூக்குக் கண்ணாடிகளை அணிந்து கொண்ட பின்
பெண்ணுக்கே பெண் அந்நியமானவளாகவும் ஆபாசமானவளாகவுமே தெரிகிறாள்.
இப்படியான பொய்புனைவுதிரைகளை கிழித்துக் கொண்டு பெண்ணை பெண்ணாக பார்க்கும் வரத்தை தரவல்ல கவிதைகளால் நிறைந்திருக்கிறது
பெண்கவி.சுகிர்தராணி அவர்களின்
#இரவு_மிருகம் புத்தகம்.
இந்த வாசிப்பு பயணம் பெண்கவியின் குரலை மறந்து கட்டவிழ்ந்த என் நாக்கு உதிர்த்த வரிகள் இவை என்னும் உணர்வை பெண்களுக்கும், வித்தியாசமான வாசிப்பனுபவத்தை ஆண்களுக்கும் வழங்கும்.
வலுவான உவமைகளால்
வன்மையாய் உண்மை பேசும் சிறிய கவிதை புத்தகம்.
அவசியம் படியுங்கள்.
Comments
Post a Comment