தூப்புக்காரி
புத்தகம் :தூப்புக்காரி
ஆசிரியர்: மலர்வதி
ஒரு தனியார் மருத்துவமனையில் தூப்புகாரியாக பணிபுரியும் 35 வயதில் கணவனை இழந்த விதவை கனகம் அவளுக்கு திருமணம் ஆகும் வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.எப்படியும் தன் மகளை இந்த வேலைக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கனகம் எண்ணுகிறாள் மகளும் கூட இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்.வேண்டாம் என்று ஓடினாலும் வாழ்க்கைசூழல் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த தலைமுறையை எப்படி தூப்புக்கார்களாகவே மாற்றுகிறது என்பதை பேசக்கூடிய புத்தகம். நாம் பயன்படுத்தக்கூடிய இடங்களைச் சுத்தம் செய்து பளபளவென ஆக்குபவர்கள் தன் வாழ்வில் ஒளியிழந்து பளபளப்பு இழந்து நலிவுறுவதை நாம் என்றும் கண்டு கொள்வதே இல்லை என்கின்ற உண்மை முகத்தில் அரைகிறது.
எப்பொழுதும் பொதுக் கழிவறையில் காய்ந்துபோன மலம், சாக்கடை நாத்தம்,மருத்துவமனை கழிவுகளை அப்புறப்படுத்துதல் என தொடர்ந்து ஒரு நாளின் பெரும்பான்மை நேரத்தைக் கழிப்பதால் கை கால்களில் ஏற்படும் தோல் நோய்கள், வறுமை, அவர்கள் செய்யும் தொழிலின் பொருட்டு சமூகத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் இழிவான பெயர், அவமரியாதை என்று முழுவதும் சாக்கடையும் மலத்திலேயுமே வாழ்ந்து கழித்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தின் வாழ்வியலை
அழுக்கு படிந்த ஆடைகளுக்குள் கருத்ததேகங்களுக்குள் ஒழிந்திருக்கும் பரிசுத்தமான மனதை முற்போக்கான சிந்தனைகளை அடையாளம் காட்டு புத்தகம்
வார்த்தைகளில் கூட கடக்கமுடியாத ஜீரணிக்க இயலாத வலிகளை நம்முடைய அலட்சியத்தால் சக மனிதர்களுக்கு தந்து கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவருமே குற்றவாளிகள்தான் என்ற புரிதலும் கூடுமான வரை நம்மையும் நம்மைசுற்றியுள்ள பொருட்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்திருப்பது நம்முடைய கடமை மட்டுமல்ல அதிலிருந்து தவறுவது ஒரு மனிதாபிமானமற்ற குற்றம் என்ற உணர்வை இப்புத்தகத்தை வாசிப்பவர்கள் உள்வாங்கி கொண்டால் அதுவே புத்தகத்தின் வெற்றியா இருக்கும்.
விலை :120
புத்தகம் வாங்க :9791700646,9443514463
Comments
Post a Comment