துப்பட்டா போடுங்க தோழி ஆசிரியர்: கீதா இளங்கோவன்

புத்தகம்: துப்பட்டா போடுங்க தோழி ஆசிரியர்: கீதா இளங்கோவன் 
நன்செய் பிரசுரம் மாணவர் பதிப்பு 
விலை: ரூபாய் 50 
பக்கங்கள்: 128 

வளர் இளம் பருவத்தில் ஆண்கள் பெண்கள் என்ற  வேறுபாடு இன்றி அனைவருமே படிக்க வேண்டிய ஒரு புத்தகம். இந்த ஆண்மையை சமூக கட்டமைப்பு தன்னுடைய ஆதிக்க கரங்களைக் கொண்டு எப்படி பெண்ணின் சுதந்திரத்தை எல்லா வகையிலும் தடை செய்கிறது என்பதை எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம்.

 ஏன் பெண் தன்னுடம்பையே அவமானத்தின் சின்னமாக குற்ற உணர்ச்சியோடு எதிர்நோக்குகிறாள்  துப்பட்டா போடவில்லை, நைட்டி போடுகிறாள் லெக்கின்ஸ் போடுகிறாள் என்று பெண்ணின் ஆடையில் இல்லாமல் போகும் சுதந்திரம் பொருளாதார ரீதியாகவும் தொடர்கிறது வேலைக்குச் சென்றாலும் கூட வீட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அனுமதி மறுக்கப்படுகின்ற நிலை போன்றவற்றை விளக்குகிறது.
 
பெண்கள் ஏன் அவசியம் பயணம் செய்ய வேண்டும்?
ஏன் அவசியம் வேலைக்குச் செல்ல வேண்டும்?
சம்பாதிக்கும் பணத்தை ஏன் தானே நிர்வகிக்க வேண்டும்?
பெண்கள் ஏன் எப்போதும் சகத் தோழிகளோடு தொடர்பில் இருக்க வேண்டும்? 
திருமணத்திற்கு பிறகான நட்பு பெண்ணுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது? 
குடும்ப கட்டுப்பாட்டை ஏன் ஆண்கள் செய்து கொள்ளக் கூடாது?
என்பதை விளக்குறார்
சமூகமும் குடும்பமும் உதாசீனப்படுத்தினாலும் அதை உதறித் தள்ளிவிட்டு எழுந்து நடப்பதற்கு பெண்களுக்கு ஊன்றுகோலாக இந்த புத்தகம் அமையும் என்பதால் அவசியம் ஒரு முறை படித்து விடுங்கள்

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை