Posts

Showing posts from August, 2020

மதில்கள்

#மதில்கள் வைக்கம் முகமது பஷீர் எழுதிய மதில்கள் 64 பக்கங்களில்  எழுதப்பட்ட சிறப்பான நாவல். சிறைச்சாலையில் மதிலுக்கு எதிர்எதிர்புறம் நிற்கும் ஒரு ஆண் மற்றும் பெண் கைதிகளின் இடையே ஏற்படும் காதலை  பேசும்  கதைக்களம். ஒரு பெண்ணின் மணத்தை உணர்ந்து மீண்டும் முகர்ந்து பார்க்கும் பொழுது அப்படியான எதையும் உணர முடியாத பொழுது  "...ஆதியில் ஏதேன் தோட்டத்தில் கண்விழித்தபோது அனுபவித்து ஏவாளின் அற்புதமான மணம்... என்னுடைய ஆன்மாவில் சேகரித்து வைத்ததாக இருக்கலாம்..." என்கிறார்.    சிறைச்சாலையில் தன் வகுப்பு தோழனைக் கண்டபோது முத்தமிடுகிறார்  "அந்த முத்ததில் ஜெயில் மெய்சிலிர்க்கிறது"  என்று எழுதியிருக்கிறார். 'எல்லாமாகச் சேர்த்து நான் சொன்னேனே மனதுக்கு கொஞ்சம் சுகமில்லை'. 'அழகாக இரண்டு அறை அறைந்தான்'.  'அவளுடைய அழகான வயது இருபத்தியிரண்டு'.   'ரோஜாக்கள் வெயில் குடித்து நிற்கின்றன'. 'நாராயணியோட அடையாளம் இந்த பூமியிலே எங்கும் இருக்கிறது'.   'துரோக புத்தி ஒன்றுமில்லை நான் மரணத்துக்கு துணையாக உட்கார்ந்து இருக்கிறேன் என்பது அவர்களுக்கு தெரியாதே'. ...

கவிஞனின் மனைவி

#கவிஞனின்_மனைவி   நான்கு எழுத்தாளர்களின்  ஏழு மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.    இதை தமிழில் மொழிபெயர்த்தவர் எம் ஏ  சுசீலா அவர்கள். 1. #கரடி_வேட்டை உண்மையில் ரஷ்யாவில் பழங்குடி இன மக்களோடு சேர்ந்து கால்கள் விரைக்கும் பனிப்பொழிவில் வேட்டைக்குச் சென்ற ஒரு உணர்வைத் தந்தது. 2.#மூன்று_துறவிகள்  ஏற்கனவே குழந்தையாக இருக்கும் போது கேட்டிருக்கக்கூடிய சிறிய அழகான கதை.டால்ஸ்டாயின் கதை  எப்படி மருவி நம் காதுக்கு வந்தது என்பதை உணர்வது சுவாரஸ்யம். 3.பிபுள்_கடானிர் என்னும் அசாமிய எழுத்தாளரின் #காளையும்_காளை_சார்ந்ததும் கதை ஒரு முறை படிக்கலாம் ரகம். 4.ஆஷாபூர்ணா தேவி என்னும் வங்க எழுத்தாளரின் #கசாப்புக்காரர்  கதை கூட்டுக் குடும்பத்தில் வாழும் ஒரு பெண்ணின் வாழ்வியல் நுண்மையாக தொட்டிருக்கிறது.  குழந்தையின் இறப்போடு கதை முடிந்த பின்னும் தன்னுடைய கருத்துக்களை பேச ஆசிரியர் கதையை கொஞ்சம் இழுத்து விட்டாரோ என்று தோன்றுகிறது.  அடுத்ததாக இடம்பெற்றிருக்கும் மூன்று கதைகளும் மஹாஸ்வேதா தேவி அவர்களின் கதைகள்   5.#கவிஞனின்_மனைவி  மிகவும் நுட்பம...

சொந்தஊர்_மழை

#சொந்தஊர்_மழை   #கலாப்பிரியா அவர்களின் சமீபத்திய  தேர்ந்தெடுத்தக்கப்பட்ட முகநூல் கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.  சின்ன சின்ன காட்சி  மூலம் வாழ்வில் கடந்து வந்த ஏதோ ஒரு நிகழ்வை அசைபோடச் செய்து  தேனீர் வேளையைப் புத்துணர்ச்சியால் நிரப்பும் புத்தகம். புத்தகத்தின் முகவுரையில் இடம்பெற்ற இரண்டு முக்கியமான செய்திகள்       1."காலம், இடம், சுயம்(Time, space, Self) சார்ந்து நிகழும் சம்பவம் ஒன்றின் அந்தத் தடங்களை அழிப்பதுதான், கவிதையின் வேலை."      2.”படிமம் புதியதாக இருக்கும் போது உலகே புதிதாக இருக்கும்”    - கேஷ்டோன் பஷ்லாஹ் கூற்று   " When the image is new, the world is new.” ― Gaston Bachelard. புத்தகத்திலிருந்து சில கவிதைவரிகள்... "எந்த ஊரை மழை  நனைத்தாலும்  சொந்த ஊர் மழை  பற்றிய  செய்தியிலேயே  அதிகமும் நனைகிறது  இதயம்" ******* ”பறவைகளைப் படைத்த பின்  கடவுளுக்கு  வானத்தை விரிவு படுத்தும்  வேலை வந்து சேர்ந்தது" ******* "இரவென்பது பகலின் நிழல்" ........... ********* ...

சொக்கட்டான் தேசம்

ஹெலடோஸ்கோப்பில் வெவ்வேறு வண்ண ஒன்றோடொன்று தொடர்பற்ற உடைந்த கண்ணாடி வளையல்துண்டிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் வண்ணமையமான பூக்களைப்பார்ப்பதுபோல் அலாதியான வாசிப்பு அனுபம் தந்தது தோழர் ராஜசங்கீதன் அவர்களின் சொக்கட்டான் தேசம் புத்தகம்            அரசியல் சமூகம் பொருளாதாரம் உளவியல் சினிமா திராவிடம் பெரியாரியம் பெண்ணியம் என எல்லா வண்ணங்களும் நிறைந்த வானல்வில் சொக்கட்டான் தேசம்!!!            ‎எந்த உணவை விரும்புபவரும் கூட்டாஞ்சோறைத் தள்ளிவைப்பதில்லை அது எல்லாராலும் எப்பொழுதும் ரசிக்கப்படும் அப்படித்தான் நீங்கள் சிறுகதை ,சுயமுன்னேற்றபுத்தகங்கள்,கட்டுரைகள்,வாழ்க்கை வரலாறு அரசியல் அங்கதம்,சமூக எள்ளல் போன்ற எதை ரசிப்பவராக இருந்தாலும் இந்த புத்தகம் உங்களுக்கு சுவைக்கும்.            ‎விடாமல்பேசியும் நாம் விட்டுவிட்ட கோணத்தில் சல்லிகட்ரை பார்க்கிறார் தோழர்!         குற்றம் கடிதல் வாழ்க்கை பதிவாய் சாதியம் சாடுகிறது!         ‎இன்னும் இன்னும்....சமகாலத்தை படிக்கவிரும்பினால் சொக்கட...

நிலமெல்லாம்_முள்_மரங்கள்

ஜீவசிந்தன் அவர்கள் எழுதிய #நிலமெல்லாம்_முள்_மரங்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பு நான்கு ஐந்து பக்கங்களில் முடியக்கூடிய 17 சின்னஞ்சிறு கதைகளை உள்ளடக்கிய நூலாகும்.தமிழ்நாடு போக்குவரத்து துறையில் நடத்துனராக இருந்து ஓய்வுபெற்ற ஜீவசிந்தன் அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய பகுதியைச் சேர்ந்த மக்களின் வாழ்வியலை அச்சு அசலான  அப்படியே ஆவணப்படுத்தியிருக்கிறார். ' ஒரு பேய் கலெக்டரை சந்திக்கிறது' என்ற தனது முதல் கதையில் எழுத்தறிவு, குடும்ப கட்டுப்பாடு போன்ற பல்வேறு செயல்களுக்கு கிராம மக்களிடம்  விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட அரசாங்கம் பேய் பிடித்தல் என்ற பெயரில் மனிதன் மீது நிகழ்த்தப்படும் சித்திரவதைகள் சில நேரங்களில் உயிரிழப்பில் முடியும் நிலையில் அதைப் பற்றிய பொது விழிப்புணர்வுக்கான முன்னெடுப்பை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை விதைக்கும் கூடியதாக இருக்கிறது.  இதுபோல் ஜாதி சங்க தலைவரை சந்திக்க சென்றவர் சென்றவரின் மனமாற்றம், அரசாங்க வேலைக்காக அரசியல்வாதியிடம் பணம் இழந்த விவசாயின் மகன்,படித்து விட்டதால் விவசாயத்தையும் அப்பாவையும் துச்சமாக நினைத்த பிள்ளை,பல ஆண்டுகளுக்கு முன் ஊரைவி...