சொந்தஊர்_மழை
#சொந்தஊர்_மழை
#கலாப்பிரியா அவர்களின் சமீபத்திய
தேர்ந்தெடுத்தக்கப்பட்ட முகநூல் கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.
சின்ன சின்ன காட்சி மூலம் வாழ்வில் கடந்து வந்த ஏதோ ஒரு நிகழ்வை அசைபோடச் செய்து தேனீர் வேளையைப் புத்துணர்ச்சியால் நிரப்பும் புத்தகம்.
புத்தகத்தின் முகவுரையில் இடம்பெற்ற இரண்டு முக்கியமான செய்திகள்
1."காலம், இடம், சுயம்(Time, space, Self) சார்ந்து நிகழும் சம்பவம் ஒன்றின் அந்தத் தடங்களை அழிப்பதுதான், கவிதையின் வேலை."
2.”படிமம் புதியதாக இருக்கும் போது உலகே புதிதாக இருக்கும்”
- கேஷ்டோன் பஷ்லாஹ் கூற்று
" When the image is new, the world is new.” ― Gaston Bachelard.
புத்தகத்திலிருந்து சில கவிதைவரிகள்...
"எந்த ஊரை மழை
நனைத்தாலும்
சொந்த ஊர் மழை
பற்றிய செய்தியிலேயே
அதிகமும் நனைகிறது
இதயம்"
*******
”பறவைகளைப் படைத்த பின்
கடவுளுக்கு
வானத்தை விரிவு படுத்தும்
வேலை வந்து சேர்ந்தது"
*******
"இரவென்பது பகலின் நிழல்"
...........
*********
குழந்தைகளின்
காகிதக் கப்பலைக்
கவிழ்த்து விட்ட
கையாலாகாத் தனத்தை
நினைத்து அழுது தீர்க்கிறது
மீதி மழை
*******
.........
கதவுகளின்
விசால மனம்
எப்போதும் போல்
வீட்டை விடப் பெரிது
********
"நேற்றுக் கனவில் நான் திறந்து பார்த்த என் மூளை காலி நகைப் பெட்டியின் வெல்வெட் துணி போல் இருந்தது"
Comments
Post a Comment