மதில்கள்
#மதில்கள்
வைக்கம் முகமது பஷீர் எழுதிய மதில்கள் 64 பக்கங்களில் எழுதப்பட்ட சிறப்பான நாவல். சிறைச்சாலையில் மதிலுக்கு எதிர்எதிர்புறம் நிற்கும் ஒரு ஆண் மற்றும் பெண் கைதிகளின் இடையே ஏற்படும் காதலை பேசும் கதைக்களம். ஒரு பெண்ணின் மணத்தை உணர்ந்து மீண்டும் முகர்ந்து பார்க்கும் பொழுது அப்படியான எதையும் உணர முடியாத பொழுது
"...ஆதியில் ஏதேன் தோட்டத்தில் கண்விழித்தபோது அனுபவித்து ஏவாளின் அற்புதமான மணம்... என்னுடைய ஆன்மாவில் சேகரித்து வைத்ததாக இருக்கலாம்..." என்கிறார்.
சிறைச்சாலையில் தன் வகுப்பு தோழனைக் கண்டபோது முத்தமிடுகிறார்
"அந்த முத்ததில் ஜெயில் மெய்சிலிர்க்கிறது"
என்று எழுதியிருக்கிறார்.
'எல்லாமாகச் சேர்த்து நான் சொன்னேனே மனதுக்கு கொஞ்சம் சுகமில்லை'.
'அழகாக இரண்டு அறை அறைந்தான்'.
'அவளுடைய அழகான வயது இருபத்தியிரண்டு'.
'ரோஜாக்கள் வெயில் குடித்து நிற்கின்றன'.
'நாராயணியோட அடையாளம் இந்த பூமியிலே எங்கும் இருக்கிறது'.
'துரோக புத்தி ஒன்றுமில்லை நான் மரணத்துக்கு துணையாக உட்கார்ந்து இருக்கிறேன் என்பது அவர்களுக்கு தெரியாதே'.
இன்னும் நிறைய இடங்கள் அவசியம் வாசித்துப்பாருங்கள்.
பின்னிணைப்பில் இடம்பெற்ற ஒரு சம்பவம். இந்த கதையை ஓணம் சிறப்பிதழுக்காக பெற்றுக்கொண்ட இதழாசிரியர் தன் வங்கியில் கையிருப்பு என்ன இருக்கிறது என்றே தெரியாமல் ஒரு வெற்று செக்கை கொடுக்கிறார்.
இரண்டடு நாட்களில் ஒரு கடிதத்துடன் அந்த செக்கை அனுப்பி வைக்கிறார் பஷீர். அதிலிருந்த வரிகள்
" திருவனந்தபுரத்தில் பேட்டை என்ற மகா ராஜ்யத்தில் சந்திரிகா என்ற பெண்மணி வஸ்திரம் வாங்க முடியாமல் அலைவதாக நாம் அறிகிறோம் அவளுக்கு ஒரு சாரி வாங்கிக்கொடுக்க இந்தக் கடிதத்துடன் பின் செய்திருக்கும் செக்கை பயன்படுத்தவும்".
பஷீர் கல்லறையிருக்கும் திசைநோக்கி எம்வீட்டு செம்பருத்தி பூக்களைத் தூவுகிறேன்.
தமிழில்:சுகுமாரன்
விலை:₹90
காலச்சுவடு பதிப்பகம்.
Comments
Post a Comment