கவிஞனின் மனைவி
#கவிஞனின்_மனைவி
நான்கு எழுத்தாளர்களின்
ஏழு மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
இதை தமிழில் மொழிபெயர்த்தவர் எம் ஏ
சுசீலா அவர்கள்.
1. #கரடி_வேட்டை உண்மையில் ரஷ்யாவில் பழங்குடி இன மக்களோடு சேர்ந்து கால்கள் விரைக்கும் பனிப்பொழிவில் வேட்டைக்குச் சென்ற ஒரு உணர்வைத் தந்தது.
2.#மூன்று_துறவிகள் ஏற்கனவே குழந்தையாக இருக்கும் போது கேட்டிருக்கக்கூடிய சிறிய அழகான கதை.டால்ஸ்டாயின் கதை எப்படி மருவி நம் காதுக்கு வந்தது என்பதை உணர்வது சுவாரஸ்யம்.
3.பிபுள்_கடானிர்
என்னும் அசாமிய எழுத்தாளரின் #காளையும்_காளை_சார்ந்ததும் கதை ஒரு முறை படிக்கலாம் ரகம்.
4.ஆஷாபூர்ணா தேவி என்னும் வங்க எழுத்தாளரின் #கசாப்புக்காரர் கதை கூட்டுக் குடும்பத்தில் வாழும் ஒரு பெண்ணின் வாழ்வியல் நுண்மையாக தொட்டிருக்கிறது. குழந்தையின் இறப்போடு கதை முடிந்த பின்னும் தன்னுடைய கருத்துக்களை பேச ஆசிரியர் கதையை கொஞ்சம் இழுத்து விட்டாரோ என்று தோன்றுகிறது.
அடுத்ததாக இடம்பெற்றிருக்கும் மூன்று கதைகளும் மஹாஸ்வேதா தேவி அவர்களின் கதைகள்
5.#கவிஞனின்_மனைவி மிகவும் நுட்பமாக ஒரு கவிஞனின் கடைசி காலத்தை அவனது குடும்ப நிலையை பேசக்கூடிய மனதை நெருடக் கூடிய கதை.
6.#குந்தியும்_நிஷாத_பெண்களும் கதை தலைப்பிற்கு ஏற்ப மகாபாரதத்துடன் தொடர்புடைய கதை. வித்தியாசமான பார்வையில் குந்தி செய்த தவறுகளை, உணர்வதைலைக் காட்சிப்படுத்துகிறது. வாசிக்கும் போதே இரத்தம் சூடேறும் மொழிநடையில் அமைந்த காத்திரமான கதை.
7.#தலாக் முத்தலாக் அபத்தத்தை படம்பிடித்துக் காட்டும் ஒரு சிறுகதை.
டால்ஸ்டாய் தவிர மற்ற மூன்று எழுத்தாளர்களுமே இந்திய எழுத்தாளர்கள் இவர்கள் இந்தியாவின் உயரிய விருதுகளான யுவ புரஸ்கர் விருது ஞானபீட விருது பத்மஸ்ரீ விருது போன்றவற்றை பெற்ற வேற்று மொழி எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளை கொண்டபுத்தகம்.
மொழிப்பெயர்பை செவ்வனே செய்திருக்கிறார்கள் எம்.ஏ.சுசீலா அவர்கள்.
நற்றிணை பதிப்பகம்
விலை:₹130ர
Comments
Post a Comment