சொக்கட்டான் தேசம்

ஹெலடோஸ்கோப்பில் வெவ்வேறு வண்ண ஒன்றோடொன்று தொடர்பற்ற உடைந்த கண்ணாடி வளையல்துண்டிகள் ஒன்றிணைந்து உருவாக்கும் வண்ணமையமான பூக்களைப்பார்ப்பதுபோல் அலாதியான வாசிப்பு அனுபம் தந்தது தோழர் ராஜசங்கீதன் அவர்களின் சொக்கட்டான் தேசம் புத்தகம்

           அரசியல் சமூகம் பொருளாதாரம் உளவியல் சினிமா திராவிடம் பெரியாரியம் பெண்ணியம் என எல்லா வண்ணங்களும் நிறைந்த வானல்வில் சொக்கட்டான் தேசம்!!!
           ‎எந்த உணவை விரும்புபவரும் கூட்டாஞ்சோறைத் தள்ளிவைப்பதில்லை அது எல்லாராலும் எப்பொழுதும் ரசிக்கப்படும் அப்படித்தான் நீங்கள் சிறுகதை ,சுயமுன்னேற்றபுத்தகங்கள்,கட்டுரைகள்,வாழ்க்கை வரலாறு அரசியல் அங்கதம்,சமூக எள்ளல் போன்ற எதை ரசிப்பவராக இருந்தாலும் இந்த புத்தகம் உங்களுக்கு சுவைக்கும்.
           ‎விடாமல்பேசியும் நாம் விட்டுவிட்ட கோணத்தில் சல்லிகட்ரை பார்க்கிறார் தோழர்!
        குற்றம் கடிதல் வாழ்க்கை பதிவாய் சாதியம் சாடுகிறது!
        ‎இன்னும் இன்னும்....சமகாலத்தை படிக்கவிரும்பினால் சொக்கட்டான் தேசம் 
நிச்சயம் படியுங்கள்
        ‎
புத்தகத்திலிருந்து...
           ‎  # மக்கள் அரசியல்வாதியாகி பலகாலம் ஆகிவிட்டது!
           ‎  # Ego is always a victim அதற்குத் தேவை எல்லாம் நேசம் மட்டுமே. அன்பு எளிது.அன்பு காட்டுதல் அதைவிட எளிது...
நொறுங்கி போனவரை இன்னும் நொறுங்க நீங்கள் தூக்கும் சுத்தியல்தான் மிகக் கனமானவை!!!
                # Perfect stranger படத்திலிருந்து...நம் உறவுகள் உடையக்கூடியதா என சோதிப்பதை விடுத்து,உடையும் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டால்,எதிர்ப்புகள் குறைந்து, உடைவதற்கான வாய்ப்புகளாவது குறையும்
                ‎#விந்தணு பெறாத கருமுட்டை காலம் முடிந்து வெளியேறுவதைத் தீட்டு என எந்தக் கடவுள் சொன்னாலும் உண்மையில் தீட்டு அந்த கடவுளும் அதை ஆராதிப்பவனும்தான்
                ‎#கையில் வாழ்க்கை மட்டும்தான் இருக்கும் வாழத்தேவையான எதுவும் இருக்காது

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை