நிலமெல்லாம்_முள்_மரங்கள்
ஜீவசிந்தன் அவர்கள் எழுதிய #நிலமெல்லாம்_முள்_மரங்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பு நான்கு ஐந்து பக்கங்களில் முடியக்கூடிய 17 சின்னஞ்சிறு கதைகளை உள்ளடக்கிய நூலாகும்.தமிழ்நாடு போக்குவரத்து துறையில் நடத்துனராக இருந்து ஓய்வுபெற்ற ஜீவசிந்தன் அவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய பகுதியைச் சேர்ந்த மக்களின் வாழ்வியலை அச்சு அசலான அப்படியே ஆவணப்படுத்தியிருக்கிறார்.
' ஒரு பேய் கலெக்டரை சந்திக்கிறது' என்ற தனது முதல் கதையில் எழுத்தறிவு, குடும்ப கட்டுப்பாடு போன்ற பல்வேறு செயல்களுக்கு கிராம மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட அரசாங்கம் பேய் பிடித்தல் என்ற பெயரில் மனிதன் மீது நிகழ்த்தப்படும் சித்திரவதைகள் சில நேரங்களில் உயிரிழப்பில் முடியும் நிலையில் அதைப் பற்றிய பொது விழிப்புணர்வுக்கான முன்னெடுப்பை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை விதைக்கும் கூடியதாக இருக்கிறது.
இதுபோல் ஜாதி சங்க தலைவரை சந்திக்க சென்றவர் சென்றவரின் மனமாற்றம், அரசாங்க வேலைக்காக அரசியல்வாதியிடம் பணம் இழந்த விவசாயின் மகன்,படித்து விட்டதால் விவசாயத்தையும் அப்பாவையும் துச்சமாக நினைத்த பிள்ளை,பல ஆண்டுகளுக்கு முன் ஊரைவிட்டு பிழைப்பிற்காக வெளியூர் சென்றவரின் உணர்வுகள், வேறு வழியே இல்லாமல் முதிர்ந்த வயதில் தன் ஊரை விட்டு மகனுடன் நகரத்திற்கு புலம் பெயரும் தாயின் மனநிலை,
வாழ்ந்து கெட்ட குடும்பமென அழைக்கப்படும் குடும்பங்கள் அந்த கவுரவத்தை கட்டிக்க முற்படுகையில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள்.
என ஒரு கிராமத்து வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அப்படியே ஆவணப்படுத்தி இருக்கிறார்.
தொகுப்பின் இறுதி கதையான நிறுத்தம் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் நிறுத்தம் இல்லாத ஓரிடத்தில் வயது முதிர்ந்தவர், கர்ப்பிணி, வேகமாக ஓடி வருபவர் என ஏதோ ஒரு சூழலில் நிறுத்தினால் அவர் சந்திக்க வேண்டிய நடைமுறை சிக்கல்கள் எவ்வளவு பெரியது என்பதை பற்றி பேசுகிறது
வானம் பார்த்த பூமியான சிவகங்கை மாவட்டத்தின் கிராமங்களில் பேய்களும் கோடாங்கிகளும் குறிசொல்லிகளும் அந்த புஞ்சை வாழ்வில் வழிகளில் எப்படி தங்கள் அடிச் சுவடுகளை பதித்து வைத்திருக்கிறார்கள் என்பதன் காட்சிபடுத்தலாக இந்த தொகுப்பு.
பாரதி புத்தகாலயா வெளியீடு
விலை ரூபாய் 90
Comments
Post a Comment