பதுங்குகுழியில்_பிறந்த_குழந்தை

ஒரு கவிஞன் காலத்தின் குரல் என்றால் மென்னி நெறிக்கப்பட்ட காகிதங்கள் எறிக்கப்பட்டு  தணிக்கை செய்யப்பட்ட செய்திகளால் இருட்டடிக்கப்பட்ட  ஒரு நிலப்பரப்பிலிருந்து எழும் கவிஞனின் குரல் எக்காலம்.

#பதுங்குகுழியில்_பிறந்த_குழந்தை
கவிதைத்தொகுப்பில் #தீபச்செல்வனின் குரல் போர்க்கால கொரூரத்தின் முப்பரிமாணம் காட்டும் ராஜரீக எக்காலம்.

     போரில் மக்கள் இறந்தார்கள் குற்றுயிராய் அலைந்தார்கள் அகதிகளாய் உலகெங்கும் சிதறடிக்கப் பட்டார்கள் என்று நமக்கு தெரியும்
      காணாமல் போன அப்பாவின் அங்க அடையாளங்கள் கண்டும் நித்திய சுமங்கலியாய் இருக்கும் அம்மாக்களின் தெருக்களில் கூறையில்லா வீட்டில் படுத்துக்கொண்டு வருடக் கணக்கில் கூறை வேய்ந்த வீட்டைக் கனவுகாணும் மகன்களின் கனவு வாசத்தை  நமக்கு நுகரத் தெரியாது
        செத்துபோன அண்ணனின் குண்டு துளைத்த சைகிளோடு பேசிக்கொண்டிருக்கும் உடன் பிறப்புகளின் மொழி நமக்கு தெரியாது.
        தன்னை சந்தித்த காதலி அறை சேரதா போது அந்த காதலனின் எண்ணவோட்டம் வெகுநிச்சயமாய் நம்மோடு ஒத்து போகாது.       சிலைகளுக்கு பாதுகாபின்மையால் மடு மாத ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட சொருபம் மதங்கடந்து ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன.     சைக்கிளில் போன காணமல் போன மகன்களை எண்ணி காகித சைக்கிள் செய்து போராடிய தாய்மார்களும் தடையமின்றி அழிக்கப்பட்ட வரலாறு
மரங்கள் கருகிய நாட்டைவிட்டு வெயியேறிய சிறகொடிந்த பறவைகள் பகல் சூழும் செயற்கை இருட்டென என நம்மால் மூன்றாம் நபராய் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த ஈழத் தெருக்களில் கரம்பிடித்து அழைத்துச் சென்று கருகிய உடல்களை உறவுமுறை கூறி அறிமுகம் செய்கிறார் தீபச் செல்வன்.
எறிந்த நகரத்தின் காட்சிப் பிரிதியாய் விரியும் இப்புத்தத்தின் இறுதி வரிகள் 'படியிறங்கும் என்னைத் தின்பதற்காக கீழே ஒரு மிரும் திரிகிறது'என கணக்கிறது.

நிலம்,நிலவு,இரவு,மரம்,பறவைகள்,
பயணமென நம்மை ஆசுவாசப்படுத்தும் அத்தனையும் அச்சுருத்தும் கருவிகளாகிப்பேன நம் இனக்குழுவின் கதறல்  புத்தகமெக்கும்...பேரீரைச்சலாய் ஓங்கரிக்கிறது.

புத்தகத்திலிருந்து...

'கனிகள் இல்லாத தேசத்தில்
தோட்டம் கருகிக் கிடந்தது'

'எனது பிணம்.....
குருதியால் போர்த்தப்பட்டிருக்கிறது'

'குழந்தையின் சோற்றுக்கிண்ணத்தில்
நிரம்பியிருந்தது மரணம்
நிலவு
சாத்தானின் முகத்தோடிருந்தது
வானம்
தீராத சாபத்தின் நிழலில் தோய்ந்திருக்கிறது.
....
'மனிதன் கற்களைத் தூக்கியது முதல்
விழுந்து கொண்டிருந்து
இன்னொரு மனிதன் மீது.'

'நேற்று எங்களோடிருந்த
...நண்பன்
எதுவும் சொல்லாமல் நாட்டைவிட்டு
ஓடியிருக்கிறான்'.

'தெய்வங்களின் ஆயுதங்கள்
கோயில்களில் நிரம்பிக்கிடந்தன'

'வானத்தில் காதெறிகிறோம்
வேவு விமானம் சுற்றுகிறது'

'ஒரு துண்டு நிலவுதானே
வானத்தில் எஞ்சியிருக்கிறது
அடர்ந்த மரங்களுக்கிடையில்
காடுகள் வரைந்த வீதிகளில்
நாங்கள் எங்க போகிறோம்'

'மதுக்கோப்பைகளின் இருட்டில் நெருங்கியிருக்கும் நமதன்புகளை           எந்த காலையில் உலர்த்தப்போகிறோம்'

நான் தெரிந்து கொண்ட புதிய வார்த்தைகள்
ராத்தல்-இறாத்தல் பழைய பிரிட்டிஷ் அளவீடு
நுளம்பு-கொசு
தரப்பால்-படகு

பதிப்பு:காலச்சுவடு
விலை:60
பக்கங்கள்:78

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை