நட்புகாலம்
#நட்புகாலம்
°°°°°°°°°°°°°°°°°°
காமம் செப்பாது கண்டது மொழியும்,
பரிசுத்தாமான இருபால் நட்பை,
முதலில் அவன் "என் நண்பன்" அதற்குபின்புதான் ஆண் பெண்
என்னும் பாலினமெல்லாம் என
உணர்த்தும் நுட்பான நெருக்கத்தை...
அன்பின் பரிசுத்த்தை கன்னியமென்னும்
அச்சாணியிலிருந்து அணுவும் விளகாமல்
காட்சிபடுத்தும் அறிவுமதி ஐயாவின்
கவிதை நூல் "நட்புகாலம்"
இந்த புத்தகத்தில் உள்ள வரிகள் படிப்பவர்களை எல்லாம் கவிதையாய் மாற்றும் வல்லமைவாய்ந்தவை.
வெகுசிறிய புத்தகம்
சிறிசிறு காட்சிகள் மூலம்
மனமெங்கும் வியாபிக்கும் புத்தகம்.
அதிஅலாதியான நட்பு நிமிடங்களை அனுபவிக்கமுடியாமல் தவறவிட்டவர்களா நீங்கள் ...பயண நேரத்தில்,தூக்கம் வராமல் உருலும் நேரத்தில் சில நிமிடங்களை இந்த காணொளி கவிதை
புத்தகத்திற்காய் செலவிடுங்கள்...
இளமைகாலத்திற்கு சென்று ஒரு மீட்டுருவாக்கத்தை நடத்தி வருவோம்.
இதோ உங்களுக்காக காணொலிபுத்தகமாய்
https://youtu.be/PTLY2bgpyU4
Comments
Post a Comment