கடல்_வற்றும்_நாளில்_மீன்கள்_கால்களால்_நடந்து_போகும்

#கடல்_வற்றும்_நாளில்_மீன்கள்_கால்களால்_நடந்து_போகும்....புத்தகம் எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி மற்றும் ஜெயமோகன்
அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய சிறிய புத்தகம்.
   வாழ்வை ஒரு எழுத்தாளன் எவ்வாறு எதிர்நோக்குகிறான் எல்லாரையும் போல் அவனுக்கும் வரும் நோய்மை வறுமை இக்காட்டுகான சூழ்நிலை போன்றவை படைப்பூக்கப் புள்ளியாக மாறும் இடம் எது என்பதை புரிந்துகொள்ள, அதன் மூலம் நம் வாழ்வியல் சித்தாந்தங்ளை இன்னும் கொஞ்சம் செம்மைப்படுத்திக் கொள்ள உதவும் விதமாக இப்புத்தகம் அமைந்துள்ளது.

   ‎ புத்தகம் முழுவதும் இடதுபுறம் நவீன் கௌதம் அவர்களின் கிராமத்து வெள்ளந்தி புன்னகையோடு நம்மை பார்த்துச் சிரிக்கும் பெண்பிள்ளைகளின் புகைப்படம் நம் முகங்களையும் தொற்றிக்கொள்ளுகிறது
.
   ‎பதிப்பகம், விலை, பக்க எண் எதுவுமே புத்தகத்தில் குறிப்பிடப் படவில்லை.
படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்திலிருந்து...

  #நான் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் தெளிவுகளை விநியோகிக்க விரும்பவில்லை

#திரைகளை அகற்றி யதார்த்த நிஜமுகங்களை நிரூபிக்கவும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கற்பனை படைப்பாளிக்குத் தேவையாக இருக்கிறது.

#என்னை நிராகரிக்க அவனுக்குக் கற்றுத்தந்து நான் எழுதவிருக்கும் படைப்புகள் மூலம் என்னை அவனால் நிராகரிக்க முடியாமல் ஆக்குவதே நான் ஏற்றுக்கொண்டிருக்கும் சவால்

#அந்த வீணை ஒலி மீதேறி நான் போக முடியுமா?
தூரங்களை ஒலி மூலம் கடக்க முடியுமா

#வானத்தைப் பார்க்க உனக்கு பல இடங்களுண்டு
வானம் உன் அறையைப் பார்க்க வேறு வழி எதுவுமில்லை
சிக்கும் கதவுகளைத் திறந்துவிடு

#திறப்பதே திறக்காத கதவுகளை பார்க்கத்தானா?

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை