தமிழ் முருகன்
பாவலர் அறிவுமதியின் #தமிழ்_முருகன் வரலாற்றுப் புத்தகம்
குறிஞ்சியும் நெய்தலும் இணைந்த குமரி கண்டத்தை ஆண்ட கடல்போர் மற்றும் நிலப்போரில் சிறந்து விளங்கிய முருகன் மத அடையாளமே இல்லாமல் தமிழ் இன கடவுளாக நமது நடுகல் வழிபாட்டு மரபு வழி ஆடு வெட்டி இரத்த பலிகொடுத்து கும்பிடப்பட்ட வீரமனிதன்
இலெமூரியாவின் அழிவிற்கு பின் மலைகளை காணுகின்ற இடங்களில் எல்லாம் முருகனை நினைவுகூர்ந்து மக்கள் வழிபாடு நடத்தினர் என்பதை விளக்குவதோடு
தமிழ் கடவுளான,கொற்றவை பெற்றெடுத்த முருகன் சிவனின் மகன் கந்தனாக திரிக்கப்பட்டது குறித்தும்,
திண்ணப்பன் கண்ணப்பானக திரிந்த இடம் எது?
யானையின் மீது பயணம் செய்தவன் மயில் வாகனானது எவ்வாறு?
இன்றும் எடுக்கப்படும் காவடி எதன் நீட்சி?
சங்க இலக்கியங்களில் பிள்ளையார் என்னும் சொல்லின் பொருள் என்ன?
ஏன் முருகனுக்கு இருமனைவிகள் என்றும் அவனை வழிபட்டால் ஆண்டியாவார்கள் என்றும் வதந்திகள் பரப்பட்டது ? குமரிக்கண்டத்தின் பெயர்காரணம் மற்றும் இன்றும் தமிழ் மக்கள் வீடுகளில் கட்டும் கற்றாழை, படிகாரக்கல்,தேங்காய்,சங்கு,
நட்சத்திர மீன் சொல்லும் தொன்மைபற்றியும் விளக்கக்கூடிய
மிகப்பிரமாதமான மிகச்சிறிய புத்தகம்.
புத்தகம் முழுவதும் கேள்வி பதில் பாணியில் அதிஎளிய மொழிநடையில் அமைந்திருப்பதுடன் புத்தகம் முழுவதும் மலைபடுகடாம்,பெரும் பாணாற்றுப்படை,பொருநராற்றுப்படை,பதிற்றுப்பத்து, மதுரைக்காஞ்சி, அகநானூறு,புறநானூறு என இன்னும் பல சங்க இலக்கியச் சான்றுகளுடன் ஆவணபடுத்தப்பட்டிருக்கிறது
அரைமணி நேரத்திற்குள் படித்துமுடித்துவிடக் கூடிய முப்பது முப்பத்தைந்து பக்கங்கள் கொண்ட புத்தகம்.
அடுத்தகட்ட ஆய்வு செய்ய வேண்டிய மூன்று முக்கிய கருதுகோள்களை இப்புத்தகம் சுட்டிக்காட்டுவதால் உண்மையில் தமிழுக்காய் தமிழைப்படிக்கிற முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகட்டுரைக்கு சரியான களம் தேடுபவர்களுக்கு அவசியமான புத்தகம்.
கடினமான அட்டை கொண்ட( hardbounded) புத்தகமாக வண்ணமயமான புகைப்படங்களுடன் தரமான காகிதத்தில் தர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை 150 ரூபாய் விலையில் 64 பக்கங்களுடன் இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது
மேலும் சாதரண பதிப்பு 50 ரூபாயிலும் கிடைக்கிறது.
அனைவர் வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டிய புத்தகம் #தமிழ்_முருகன்
Comments
Post a Comment