சகாராவைத்_தாண்டாத ஒட்டகங்கள்

நா.காமராசனின் #சகாராவைத்_தாண்டாத ஒட்டகங்கள் வசன காவியமென்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் இப்புத்தகம்  உரைநடை மற்றும் உவமைகள்,உருவகங்கள், தத்துவார்த்த சிந்தனைகளென கவித்துவமாகவும் விளங்குகிறது. குறிப்பாக கம்யூனிச தோழர்களுக்கென எழுதிய வாழ்த்துப்பாக்கள் ,குழந்தைகள்,ரிக்சாகாரர்,மகாபலிபுரம் பற்றிய கவிதைகள் சிறப்பாக அமைந்துள்ளன. புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளும் கூட எளிதில் படித்து புரித்துகொள்ளும் இனிய நடை.
    புத்தகத்தின் மையத்தில் எழுதப்பட்டுள்ள ஞாபக மலர்கள்,  என் சகுந்தலை போன்ற சுயகாதல் அனுபவம் போன்ற பாங்கில் எழுதப்பட்டுள்ள கவிதைகள் புத்தகத்தின் தாக்கத்தை தொய்வுறச் செய்கின்றன.அவைகளை தவிர்த்து நல்ல வாசிப்பனுபவம் தரும் புத்தகம்.

குமரன் பதிப்பகம்
விலை:₹50
பக்கங்கள்:96

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை