தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
#தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் மாரிசெல்வராஜின் சிறுகதை புத்தகம்.
சிறுமை கீழ்மை உயர்வு புனிதமென எந்த வகைப்படுத்தலும் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப்பதிவு.
நண்பர்களோடு சேர்ந்து சமைத்து சாப்பிடலாமென ஒரு பன்றியைப்பிடித்து சுட்டுக்கொண்டிருக்கையில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற பயம்கூட அற்று புதருக்குள் இருந்து ஓடிவந்து கருகிய முலையை சப்பும் பன்றிகுட்டிகளை கண்டு கலங்காமல் இருக்கமுடியவில்லை என்றாலும் அது தாய் பன்றி என்றுதெரியாமல் கொன்ற பையன்களையும் திட்டத் தோன்றவில்லை.
இப்படி காலம் போட்ட முடிச்சுகள் ஏராளமாய் நிறைந்த புத்தகம் பக்கத்து வீட்டிகார்களின் கதை, பிழைப்புக்கு இடம் தேடிவந்த வெளியூர் தம்பதிகளின் கதை என வீதிமனிதர்களின் வாழ்வைப் பேசும் புத்தகம்.
'வனதெய்வம்' கதை பெண்ணிய சிந்தனையை வித்தியாசமான கோணத்தில் பேசுகிறது தாமிரபரணி ஆற்றில் கலத்துபோன சாமாணிய மனிதர்களின் இரத்தவடையை நுகரச்செய்கிற புத்தகம்
வம்சி பதிப்பகம்
200 பக்கங்கள்
150 ரூபாய்
Comments
Post a Comment