மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்.

  ஏங்கல்ஸ் 'அடிமைப்படுத்தலின் மூன்று முக்கியமான வடிவங்கள்' இன்னும் விரிவான நூலுக்கு முன்னுரை எழுதினார் பின் அந்த புத்தகத்தை எழுத முடியாமல் போனதால்
'மனிதக் குரங்கிலிருந்து  மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்திரம்' என்ற பெயரில் கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டது.
   மனிதக் குரங்கிலிருந்து மனிதன் எப்படி வெளியேறினான் அதற்கு  உணவு பழக்க வழக்கம்,இயற்கை சூழ்நிலைகள் எல்லாம் எவ்வாறு உதவி செய்தன அதன்பின்  கைகள் உழைப்பின் உறுப்பாக மாறிய காலகட்டம்
   அதனைத் தொடர்ந்து சுயமாக சிந்தித்து மனிதன் பேச ஆரம்பிகக்கும் நிகழ்வு.
   ‎ கைகளும் பேச்சும் மனித வாழ்க்கையின் பரிமாண வளர்ச்சியில் மிக முக்கிய மாற்றங்களை எவ்வாறு உருவாக்கின.
   ‎மிருகங்கள் திட்டமிடாமல் சில இயற்கையில் அழிவைச் செய்கின்றன. மனதின் திட்டமிட்டு பல்வேறு இயற்கை மூலங்களை மாற்றியமைக்கிறான்,அழிக்கிறான்.
   ‎ஆரம்பத்தில் இது வெற்றிகரமான யுத்தியாக தெரிந்தாலும் உடனடி மற்றும் நாள் பட்டவிளைவுகள் எதிர்மறையாய் அமைகின்றன.
   ‎உபரிநிலம் அற்றுபோகும் போதும் நிலம் தனிநபருக்கு சொந்தமாகும் போதும் மனிதர்களிடையே ஏற்றதாழ்வு ஏற்படுகிறது.மனித செயல்களால் இயற்கை தொடர்ந்து காயப்படுகிறது. இதை சிறிதும் பொருட்படுத்தாமல் மனிதன் அடுத்தடுத்த கட்டத்திற்கு தன் சுயநலத்தை வளர்த்து சொல்கிறான்.
   ‎ உதாரணமாக கியூபா மலை சரிவில் தெற்கு பகுதியில் இருந்த பெரிய மரங்கள் கொண்ட காட்டை அழித்து விட்டு பணக்கார முதலாளிகள் காப்பித் தோட்டங்களை அமைக்கிறார்கள் பின் ஏற்பட்ட கனமழையில் அப்பகுதியில் இருந்த மண் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டு மலையின் ஒரு பகுதி முழுவதும் வெறுமையான பாறைகள் ஆகிறது. இதனால் மழைப்பொழிவு குறைகிறது அப்பகுதியின் வெப்பநிலை அதிகரிக்கிறது.
   ‎ இதோ இந்த நீண்ட வரலாற்றின் சுருங்கிய வடிவத்தை 17 பக்கங்களில் எழுதியிருக்கிறார் ஏங்கள்ஸ் அவசியம் ஒருமுறை வாசித்து விடுங்கள்

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை