Posts

துப்பட்டா போடுங்க தோழி ஆசிரியர்: கீதா இளங்கோவன்

புத்தகம்: துப்பட்டா போடுங்க தோழி ஆசிரியர்: கீதா இளங்கோவன்  நன்செய் பிரசுரம் மாணவர் பதிப்பு  விலை: ரூபாய் 50  பக்கங்கள்: 128  வளர் இளம் பருவத்தில் ஆண்கள் பெண்கள் என்ற  வேறுபாடு இன்றி அனைவருமே படிக்க வேண்டிய ஒரு புத்தகம். இந்த ஆண்மையை சமூக கட்டமைப்பு தன்னுடைய ஆதிக்க கரங்களைக் கொண்டு எப்படி பெண்ணின் சுதந்திரத்தை எல்லா வகையிலும் தடை செய்கிறது என்பதை எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம்.  ஏன் பெண் தன்னுடம்பையே அவமானத்தின் சின்னமாக குற்ற உணர்ச்சியோடு எதிர்நோக்குகிறாள்  துப்பட்டா போடவில்லை, நைட்டி போடுகிறாள் லெக்கின்ஸ் போடுகிறாள் என்று பெண்ணின் ஆடையில் இல்லாமல் போகும் சுதந்திரம் பொருளாதார ரீதியாகவும் தொடர்கிறது வேலைக்குச் சென்றாலும் கூட வீட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அனுமதி மறுக்கப்படுகின்ற நிலை போன்றவற்றை விளக்குகிறது.   பெண்கள் ஏன் அவசியம் பயணம் செய்ய வேண்டும்? ஏன் அவசியம் வேலைக்குச் செல்ல வேண்டும்? சம்பாதிக்கும் பணத்தை ஏன் தானே நிர்வகிக்க வேண்டும்? பெண்கள் ஏன் எப்போதும் சகத் தோழிகளோடு தொடர்பில் இருக்க வேண்டும்?  திருமணத்திற்கு பிறகான நட்பு ப...

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை

புத்தகம் :பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை  ஆசிரியர்: வீரசோழன் க.சோ. திருமாவளவன்  படைப்பு பதிப்பகம் பக்கங்கள்:110 விலை:100 மண் மனம் மாறாத கிராமத்து வாழ்வியலின் உறைநிலை இந்த கவிதை தொகுப்பு.  பக்கங்கள் தோறும் எலுமிச்சை பழங்களின் நறுமணமும் முருங்கைக் கீரையின் பச்சையமும் தாத்தா பூனைக்கு வைக்கும் தயிர் சாதத்தின் மனமும் கோலிகுண்டுகளாய் உருண்டோடுகின்றன .கரிசல் காட்டை சுற்றி காட்டி கடைசியில் யமுனை ஆற்றங்கரையில் கண்ணீரோடு நம்மை நிற்க வைக்கிறார் ஆசிரியர்.    பருத்தியை வெண் குங்குமம் என்கிறார் மெய்ப்பனின் முத்தத்தை கசாப்பு கடைக்காரன் ஒருபோதும் அறிந்ததில்லை என்கிறார் தேநீர் கடைக்காரனை சுவைஞானி என்கிறார் மழைத்துளியை உயிர் உருண்டை என்கிறார்.   | பூனைகள் பாதகம் ஏற்படுத்தாத பசு|  |ஆலமரத்தின் விழுதுகளில் தூரிஆடும் குழந்தைக்கு ஏற்றவரே காற்றில் தன்னை இழகுபடுத்தும்| வாழ்வை புரட்டி போட்ட நுண்கிருமி சொந்த ஊரில் உயிரை விட கையில் ஏந்தி செல்கிறது கல்லறையை  செதுக்கி இருக்கும் புத்தனை  தீண்டுவதே இல்லை சிற்பி    பூத்தே இருக்கும் ஏக்கங்களுக்கு அறுவடை அற்ற ந...

அப்பத்தா

புத்தகம்   :அப்பத்தா சிறுகதைகள்  ஆசிரியர்:பாரதி கிருஷ்ணகுமார் The Roots வெளியீடு விலை:100 பக்கங்கள்:97  கிராமத்து வாழ்வியலின் வெவ்வேறு அனுபவங்களை வேறுபட்ட மனித கதாபாத்திரங்களின் வழியாக பேசுகிறது இந்த புத்தகம்.     மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன அவற்றின் பெரும்பாலான கதைகளின் கதாபாத்திரங்களோடு சிறிது நேரம் பயணித்தில் ஏற்பட்ட பிணைப்பு அவர்களோடு நீண்ட நேரம் பயணிக்க வேண்டும் என்கின்ற ஆவலை ஏற்படுத்துகிறது. நாவலாக படிக்க கிடைக்காதா என்று ஏங்கும் வண்ணம் கதைக்கு பின் என்ன ஆனதோ என்னும் ஆவலையும் ஏக்கத்தையும்பல கதைகள் உருவாக்குகின்றன குறிப்பாக அப்பத்தா கதை இந்த அனைத்து கதைகளிலும் முத்தாய்ப்பாய் விளங்குகிறது இன்னும் ஊத்து, கோடி, லுங்கி  எல்லாம் மறக்க முடியாத கதைகள்.  எளிமையான எழுத்து நடையில் வழவழவென்று இழுக்காமல் சொற்ப வார்த்தைகளில் எழுதப்பட்டுள்ள இந்த கதை பேசாமல் விட்டிருக்கும் மௌனங்கள் கூட அதிகமா நம்மை சிந்திக்க வைக்கின்றன.    ஏதோ ஒரு வாசிப்பு போட்டி போல கடகடவென்று எடுத்து இந்த பத்து கதைகளையும் முழுமூச்சில் படித்துவிட்டு வைத்து விட முடியாது. ஒ...

அரசியல்_எனக்கு_பிடிக்கும்

புத்தகம்:அரசியல்_எனக்கு_பிடிக்கும் ஆசிரியர்:ச.தமிழ்செல்வன் ஆதி முதல் இன்று வரை உள்ள உலக மற்றும் தமிழக அரசியலின் இரத்தின சுருக்கம் இந்த  புத்தகம்.49 ஏ பக்கங்கள் பள்ளி குழந்தைகளும் படிக்கும் அளவுக்கு எளிய மொழி நடை அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.உண்மையான இடதுசாரிகள் வலதுசாரிகள் யார்.பாட்டாளிகளை பண்பாட்டு  கலச்சாரம் மற்றும் கல்வி அமைப்புகள் எப்படி ஏன் மொன்னையாக வளர்க்கின்ற என்பதை விளக்கி அரசியலுக்குள் உறைத்து கிடக்கும் உண்மையான பொருளாதார அரசியலை பேசும் புத்தகம். பதிப்பு : பாரதிபுத்தகாலயம். குறிப்பு டிவிட்டரில் Tamilnadu marx reading club ல் இலவசமாக கடந்த ஆண்டு பெற்றுக்கொண்ட பிரதி

அர்த்தம் உள்ள இந்து மதம் 5ஆம் பாகம் ஞானம் பிறந்த கதை

புத்தகம்: அர்த்தம் உள்ள இந்து மதம் 5ம் பாகம் ஞானம் பிறந்த கதை ஆசிரியர்:கண்ணதாசன் நன்கு கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க சிந்தனை நிறைந்த புத்தகம் படி படியாய் பல நிலைகளில் ஞானம் கிடைக்கிறது அதில் உட்சபட்ட  ஞானம் என்னவென்றால் சிவனின் மனைவி உட்பட உலகில் அனைத்து பெண்களும் இரட்டை மனம் கொண்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்வதாம். நல்ல மனைவி அமையாதவர்கள் சன்னியாசி ஆக வேண்டுமாம்😑🐒

ஜென்னி மார்க்ஸ்

புத்தகம்: ஜென்னி மார்க்ஸ் ஆசிரியர்:என்.ராமகிருஷ்ணன் பிள்ளை பசியில் பாலென்று உரியா மார்பத்தின் மேல் தோல் உரித்து பிள்ளையின் வாயெல்லாம் இரத்தம் அன்றைய தினம் வீட்டிலிருந்த பொருட்களையும் கடன்காரர்கள்  தூக்கி சென்ற நிலையில் தன் தோழிக்கு கடிதம் எழுதுகிறாள் நான் அதிஷ்டசாளி அன்பான கணவர் என் அருகில் இருப்பதால்... என்று எவ்வளவு துன்பம் அனுபவித்த பின்பும் அரசகுடும்பத்தில் பிறந்து அன்றாடகாச்சியை மணந்ததை பாக்கியமாகவே கருதினார்.இப்படி கடைசிவரை சாகும் நொடிவரை குறையாத நேசத்தோடு காதலிக்க முடியுமா என்பது பெரும் வியப்பே!....என்றும் நான் வியக்கும் பெண்...! எங்கெல்சும், ஜென்னியும் இல்லையென்றால் நிச்சயம் மார்க்ஸ் கிடைத்திருக்கமாட்டார்.நட்பை ,காதலை, வறுமையை, வலியை, நேர்மையை, கொள்கைபிடிப்பை, பிடிவாதத்தை சொல்லிகொடுக்கும் நூல்.

பறக்கும் ஹேர்கிளிப்

 புத்தகம்:#பறக்கும்_ஹேர்_க்ளிப்  ஆசிரியர்:விஜயபாஸ்கர விஜய் குழந்தைகளுக்கான புத்தகம் என்று எளிதாக கடந்துவிட இயலாது ஒவ்வொருகதையிலும் வித்தியாசமான உத்திகள் உதாரணமாக 'தயங்காதே' கதை   ஒரே நேரத்தில் நடக்கும் இரு நிகழ்வுகளை கொண்டு அப்பா மகள் இருவரும் பாடம்கற்பதாய் அமைகிறது .              'பேனா பெண்' எளிமைபடுத்தபட்ட வரலாற்றுக்கதையாய்....  'பறக்கும் ஹேர்கிளிப்' கதையில் முடிவை குழந்தையின் வசமே விடும் யுத்தி                     ‎'சூரியனும் குட்டிபெண்ணும்':: கதையெல்லாம் முற்றிலும் குழந்தைகள் உலகில் குழந்தையாய் நின்று எழுதப்பட்டிருக்கிறது . பெரியவர்களையும் பின்னனோக்கி கூட்டிசெல்லும் மறுபட்ட கதை.   இப்படி இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொருகதையும் ஒவ்வொருபாணியில் அமைந்திருப்பதோடு அரைத்தமாவையே அரைக்காமல் ஆசிரியர் இன்றைய சமகாலத்தில் குழந்தைகளுக்கு தேவையான அவசியமான விசயங்களை எளிமையாக பேசியிருக்கிறார்             ‎பொதுவாக அக்கா குழந்தைகள் மற்றும் பக்கத்துவிட்டு தம...