சிறகிசைத்த_காலம்
#சிறகிசைத்த_காலம் என்னும் புத்தகம் திருவண்ணாமலை,டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கு கொண்ட பல்வேறு துறை சார்ந்த 14 கலைஞர்கள் பற்றிய அறிமுகம்,பேச்சு,அவர்களின் சிறுகதை,நாவலின் சில பகுதி அல்லது நேர்காணல் உள்ளடக்கிய தொகுப்பு.
இந்த படைப்புகளெல்லாம் பள்ளிகாலச்சூழலோடு தொடர்புடையதாக தேடி எடுத்துத் தொகுக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
தங்கர்பச்சானின் குடி முந்திரி சிறுகதை இதயத்தை கையிலெடுத்து கண்ணீரில் கழுவி தூய்மைபடுத்தித் தருகிறது.
பாரதி கிருஷ்ணகுமாரின் கல்பனா கதை முடிந்த பின்னும் மனம் கல்பனாவை பின்தொடர்வதை தவிர்க்க இயலவில்லை. எஸ்.ராவின் சிரிக்கும் வகுப்பறை நாவலில் வரும் திவாகர் குட்டி சிரித்துக்கொண்டே அழவைக்கிறான்.
இறுதியாக ஜெ.மோவின் அஜிதன் பற்றிய கட்டுரையைப் படிக்கும்போது அப்பாவாய் ஜெ.மோவை தாழ்பணியத்தோன்றியதோடு (எஸ்ரா)திவாகருக்கு இப்பிடி ஒரு அப்பா வாய்க்காமல் போனதை எண்ணி ஏங்கித்தான் போனேன்
பீ.லெனின் நேர்காணல் வரும் போது திரைத்துறை சார்ந்த ஒருவரோ திரைத்துறை பற்றிய நேர்காணல் சப்பைகட்டாகத்தான் இருக்கும் என்று அலட்சியமாகத்தான் வாசிக்க ஆரம்பித்தேன் உண்மையில் பீ.லெனின் மற்றும் சுரா ஐயாவின் பக்கங்கள் வெகுநுட்பமானாவை நம் சிந்தைக் கோணத்தை சரியான கோணத்தில் நிலைநிறுத்தும் வழிகாட்டிகள்.... பிரபஞ்சனின் மரி என்கிற ஆட்டுக்குட்டி தொடங்கி புத்தகமெங்கும் வித்தியாச வித்தியாசமான அனுபவங்களால் நிறைந்திருக்கும் சிறகிசைத்த காலம் கூட்டாஞ்சோறாய் மனதில் நிற்கிறது.
நடிகர் நாசரின் கட்டுரை கொஞ்சம் பிசிறு தட்டுவதாகவும்
துரைமுருகன் அவர்களின் பேச்சு சிறிது மிகைப்படுத்தலாகவும் இருந்ததாக ஓர் உணர்வு.
ஒரு புத்தகத்தில் ஒரு masterpiece யே கண்டுகொள்ள முடியாத காலகட்டத்தில் ஏறத்தாழ அத்தனையும் masterpiece படைப்புகளாக அமைந்திருக்கிறதென்றால் இதைத்
தொகுக்க பவாசெல்லதுரை-வே.நெடுஞ்செழியன் அவர்கள் எவ்வளவு நீண்ட ஆழமான வாசிப்பை செய்திருக்கிறார்கள் என்று அவர்களின் உழைப்பை நன்றியோடு எண்ணிப்பார்க்கிறேன்.
பதிப்பகம் :வம்சி
விலை :200
Comments
Post a Comment