பரத்தை_கூற்று

#பரத்தை_கூற்று
               -சி.சரவணகார்த்திகேயன்

நாம் சிந்திக்க மறுத்த அல்லது புறக்கணித்த பரத்தைப் பெண்களின் வாழ்வியலை வலிகளை
அதற்கு பின்னான அரசியலை எளிய மொழியில் 150 பாக்களாக வடித்துள்ளார் ஆசிரியர்.
‎        
இந்த புத்தகம் உங்களை புரட்டிப்போடுமா என்று கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றும்செய்யாது.

நீங்கள் அலுவலகத்திலும் பயணத்திலும் இன்னும்  எங்கெங்கோ சந்திக்கும் பெண்களில் 36 பேரில் ஒருத்தி பாலியல் தொழிலாளியாக இருக்கிறாள் என்னும் உண்மையைச் சொல்லும்.

பரத்தையர் உருவாகும் முன்பே பரந்த சிந்தை இருந்திருக்கவேண்டும் என்னும் நிசர்னத்தை இன்னும் தெளிவாக உணர்த்தும்.

‎     வாசிப்பதற்கு அரைமணிநேரம் கூட எடுத்துக்கொள்ளாத இந்த புத்தகம் வாழ்நாளெல்லாம் இருக்கக்கூடிய ஒரு சிந்தை மாற்றத்தைத் தரவல்லது.

‎     வெறும் பரத்தையர்களைப் பற்றியதா இப்புத்தம் என்றால் இல்லை என்பேன்.

ஒரு பாலியல் தொழிலாளியின் பார்வையில் சமூகம் என்னவாக இருக்கிறது என்பதை படம் பிடித்துக் காட்டுகின்ற சில வரிகள்

"குறிப்பெயர்களை வசைச்சொற்களாய் பிரயோகிக்கும் சமூகம்
பிரசவிக்கும் வேசிகளை"

#வீட்டுப்_பிராணியல்ல‌_நான்_காட்டு_ராணி.​​(என் மனங்கவர்ந்த வரி)

   பொதுவாக அணிந்துரைகள் அலுப்பூட்டக்கூடியவையாக இருக்கும் ஆனால் பரத்தை கூற்றை பொறுத்தவரை
‎ஒரு விளையாட்டு வீரனுக்கும் ஆடுகளத்தில் இறங்கும் முன் அளிக்கப்படும் சூடேற்று பயிற்சியை போல கவிதைகளுக்குள் பயணப்பட வாசகனை தாயர்படுத்தும் ஒரு களமாக அணித்துரை அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

‎  என்னைப் பாதித்த பாக்களையெல்லாம் சொல்லவேண்டுமென்றால் ஒரு ஐம்பது கவிதைகளையாவது சொல்லவேண்டும். எனவே சிலவரிகள் மட்டும்...

"நன்கு புணர்ந்து களைத்த‌ நள்ளென் யாமமொன்றில் பூப்பெய்திக் கனிந்தேன்"

"இலவசமெனில் அலட்சியம் தான் எல்லோர்க்கும் – புண‌ர்ச்சி உட்பட.​"

"காமமடக்கியதால் ஞானமடைந்தனர் யோகி சிலர் – யாம் அது அலுத்ததனால்.​"

"இன்றைய தேதியில் இங்கே எவளுக்கும் சாத்தியமில்லை – பெய்யெனப் பெய்யும் மழை"

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை