சிதம்பர நினைவுகள்
#சிதம்பர நினைவுகள்
பாலசந்திரன் சுள்ளிக்காடு
தமிழில்:கே.வி.ஷைலஜா
Death of the author போன்ற மேற்கத்திய சிந்தாந்தங்கள், எழுத்துகளை படிக்கும் போதும் எழுத்தாளரை விட்டிவிடுகள் என்றும் எஸ்.ரா போன்றோர் 'எழுத்தாளரின் வாழ்க்கை வழி எழுத்துகளை கண்டடைவது முழுமையா இருக்குமென்றும்'முன் மொழிகிறார்கள்.
இரண்டுமே வெவ்வேறு சூழலுக்கு உகந்தவை அவசியவானவை ஆயினும் ஒரு எழுத்தாளனை அவனை அவனாகவே உள்வாங்கிக்கொள்ள பல நேரங்ஙளில் வாசகன் தவறிவிடுகிறான் இதற்கு எழுத்தாளரின் நயவித்தகமும் சில நேரங்களில் காரணம் என்கிற பட்சத்தில் "சிதம்பர நினைவுகள்" போன்ற புத்தங்கள் நெல்லிக்கனி.
உண்மையின் வசிகரத்தை நம்பி தயங்காமல் மனதின் நிர்வானம் காட்ட நிச்சம் ஒரு அசாத்திய துணிச்சல் தேவை.
சில பெண்களின் மீதான சபலம், கருகலைப்பு என கெட்டவன் என்ற சட்டத்திற்குள் நாம் எழுதிவைத்த சம்பங்களை நிகழ்த்த ஒரு சாமானியனின் வாழ்க்கையில் நிகழ்த்திவிட காலம் ஒருவனை எப்படி நய்யப் புடைக்கிறது என்பதை பார்க்கையிலா வாழ்க்கையை புதிர் எளிதில் பிடிபடுகிறது. பாலாவின் பதில் பல கேள்விகளை இழுத்துவந்து மனதின் மையத்தில் விட்டுவிட்டு எளிய பாதசாரியாய் நம்மை கடந்து செல்கின்றது.
தன்னுடைய மிரமாண்டங்களை சுறுக்கி வாசன் அருகமரும் எழுத்தானின் உயரம் யுகங்களால் தீண்டமுடியாதது இந்த மகத்தான சாமனியனின் பாதையில் கிடந்த முட்களை பார்த்ததால் இனிமேல் என் பாதையில் கிடைக்கும் முட்களைப் பார்க்குப் போதெல்லாம் புன்னகைப்பேன்.
எள்முனையளவும் இவன் வேறு மொழியில் எழுதிய புத்தகத்தின் மொழி பெயர்ப்பு இப்புத்தகம் என்னும் உணர்வைத் தந்துவிடாத ஷைலு அம்மாவுக்கு அன்பு முத்தங்கள் மொழிபெயர்ப்பென்பது வெறும் வாத்தைகளில் பெயர்வு அல்ல என்பதை உணர வேண்டுமா சிதம்பர நினைவுகளை ஒரு முறையேனும் படித்துவிடுங்கள்.
சாஹினாவும்,விஜயலெக்சுமியும்,ஶ்ரீதேவியும்,ராதிகாவும் உங்களோ உங்கள் உள்ளத்தின் மொழியில் பேசுவார்கள்
Comments
Post a Comment