பரத்தையருள்_ராணி
#பரத்தையருள்_ராணி
லீனா மணிமேகலையின் பரத்தையருள் ராணி என்னும் கவிதை புத்தகம் பரத்தையருள் ராணி,உலகின் அழகிய முதல் பெண்,ஒற்றையிலையென...என்னும் மூன்று கவிதைத்தொகுப்புகளை உள்ளடக்கிய புத்தம்.
பெண் அடிமைதனம் மற்றும் சமூக அநீதியைக் கேள்வி கேட்கும் விதமாக அமைந்திருப்பதுடன் பூதகரமாக்கப்பட்ட புனிதம் பற்றிய எண்ணங்களை உடைத்திருக்கிறது
மொழி ஆடை சூடை சூடி அழகு பார்த்தை வார்த்தைகளை வீதியில் இறைத்திருக்கும் அசாத்திய மொழி நடையும் துணிவான கருத்துக்களும் பிரமிக்க வைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இயல்புக்கு மாறான சித்திரப்புகள் அற்ற அன்பும் பாசமும் நிறைந்த நட்பில் காதலில் திளைக்கும் உண்மைக்காக ஏங்கள் ஒருத்தியின் மன உணர்வாகவே கவிதைகள் அரும்பியிருப்பது வாசிப்பனுபவத்தை இன்னும் சுவாரசியமாக்குகின்றன.
சமகாலத்தில் கவிதை எழுதும் பெண்களுக்கு புதிய உத்வேகம் தரக்கூடயதாகவும் எழுத்து பரப்பு பற்றிய தெளிவையும் ஏற்படுத்திக்கொள்ள உதவதாகவும் இப்புத்தக வாசிப்பு அமையும்
Comments
Post a Comment