நிழல்கள்
படிப்பில் ஆர்வமில்லாத படைக்கும் குணம் கொண்ட உலகறியா ஒரு எழுத்தாளனின் ஆரம்ப கால வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கும்.
துன்பங்களும் வறுமையும் அவமானமும் ஒரு எழுத்தாளன் முன் எப்படி தன் கையாலாகததனத்தை உணர்ந்து அவன் எழுத்துக்குள் தன்னை எப்படிக் கட்டிக்கொள்கின்றன, என்பதை விளக்கும் எளிய சிறிய நாவல் நகுலன் எழுதிய நிழல்கள்.
கதையென்னவோ எழுத்தாளனை மையமிட்டதாயினும் அப்பாவைப் பின்பற்றி ஆணாதிக்கத்தின் நகலாக வளரும் மகன் ,முழுவதும் அம்மாவைப்போல் சரணாகதியாகும் தன்மை திரிந்த மனைவியைப் புரிந்து கொள்ள திணறி தன் பயம் வெளிப்படாமல் இருக்க மனைவியை அடக்க முற்படுகிறான்,அந்த எதிர்வினையை ஏற்கனவே மனதில் தரிசித்திருந்து எளிதில் கடக்கும் மனைவி என எளிய கதை என்றாலும் வித்தியாசமான எழுத்து நடை .
தொடங்கிய புள்ளியிலேயே முடியும் முடியாத கதை தன்னிலையில் எழுதப்பட்டிருக்கிறது.
என்னுடைய அனுமானம் சரியாயின் இது நகுலனின் சுயசரிதையாக இருக்கலாம்.
புத்தகம் : நிழல்கள்
ஆசிரியர் : நகுலன்
பதிப்பகம் :நற்றிணை
விலை :50 ரூபாய்
பக்கங்கள் :64
Comments
Post a Comment