மறக்கவே நினைக்கிறேன்

ஒரு பரம ஏழை தான் எண்ணவே முடியாத உயரமான மாளிகையில் நிற்கும் பணக்காரணைப் பார்க்கும் போது இந்த வாழ்க்கையில் தனக்கு கிட்டாதுபோன வாழ்க்கையை எப்படியான ஏக்கத்தோடு எதிர்கொள்வானோ அப்படிதான் மாரிசெல்வராஜ் அவர்களின் மறக்கவே நினைக்கிறேன் னை படித்து முடித்த பொழுது இருந்தது.
      ஒரு சிறுகதை தொகுப்பை படிக்கிறோமென்றால் ஏதோ இரண்டுகதைகள் உச்சமாக மனதைத்தொடும்.இல்லை நாவல்களிலிலும் கட்டுரைகளிலும் கூட சில பகுதிகளை முத்தாய்ப்பென்று அடிக்கோடிட்டுகாட்ட முடியும்.ஆனால் மறக்கவே நினைக்கிறேனில் பக்கத்துக்கு பக்கம் ஆயிரம் ஆயிரம் உணர்வுகடத்தல்கள்.
      ‎இந்த புத்தகத்தை முடிக்கையில் கிளியைத்தொலைத்த சோசியக்காரன் டைரி எழுதும் அண்ணன் கட்டியணைக்கும் நண்பன் கட்டிவைத்து அடிக்கும் தோப்புகாரன் காதல்கடிதம் எழுதசொல்லும் சீனியர் பரிச்சையில் சொல்லிதரும் நண்பன் கொத்தாக பொம்மைகளை பரிசளிக்கும் தாத்தா
டீபன்பாஸ்திருடிதின்னும் நண்பர்கள் என்னைய கல்யானம் பண்ணிக்குவேன் சத்தியம் கேட்குகும் பாலியதோழி  அழுகும் அப்பா அக்காவின் பூனைகுட்டி கல்லூரி தோழி பூங்குழலி முகமூடி திறக்காத கிற்மஸ் தாத்தா அப்பாவை சாக்குடுத்த சேல்ஸ் கேல் அம்மாவை இழந்த மகன்கள் மனநலம் பாதித்த அப்பா வாத்தியார் டாக்டர் தாத்தா நா எப்ப முட்டிபோட்டு உருக்கமா வேண்டாலும் உனகாகதான்டா மாரி னு சொன்ன ஜோ இப்படி ஆயிரம் ஆயிரம் தேவைகளால் உங்கள் வீடு கனக்கும்

புதிதாக திரைகதையெழுதுபவர்களுக்கு சம்பவங்களை திரைகதையாக தொடுக்கும் சூட்சமத்தையும் சொல்லுக்கொடுக்கும்
     என் இரத்தன் என் மண் என் உறவின் வாழ்க்கை இது என்று என்னை அப்பிக்கொண்ட புத்தகம் இது.
     ‎மாரிசெல்வராஜ் ஊரான் இல்லை அவன் என் உறவு என் ரத்தம் என்று மெச்சிக்கொள்ள அந்த முத்தை மனதில் பதிக்க எத்தனித்து அண்ணனின் வீடியோக்களையே கடந்த ஒருவாரமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
     ‎திடிரென மாரியின் வயதென்னவென்று தேடினேன் நம்மைவிட 10 வருடம் பெரியவரின் வாழ்க்கையில் இத்தனை மனிதர்களா ஆக இதில் பாதியையாவது இந்தவயதில் அடைந்திருக்க வேண்டுமே  என்று எண்ணிகையில் அன்போடு சிறிது பொறாமையும் ஒட்டிக்கொள்கிறது.

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை