பிரிதல்_அன்பின்_நிமித்தம்

பொதுவாக காதல் கவிதைகள் என்றாலே உணர்ச்சிவசப்படுத்துவதாகவோ அல்லது காதலின் ஏதோ ஒரு நிலையில் உள்ளவர்களுக்கு அந்த நிலையை மேலும் கொண்டாடவோ வசைபாடவோ உதவும் விதமாகவோ இருக்கும்
        இல்லையாயின் காதல் வயப்படுத்திய அந்த ஒரு நபரை ஆராதிப்பதாய் இருக்கும் என்ற எதிர்பார்பை முற்றிலும் உடைத்து வெகு இயல்பான எளிய நடையில் நிதர்சனமான வரிகளால் நிறைந்திருக்கிறது யாத்திரியின்
#பிரிதல்_அன்பின்_நிமித்தம் கவிதைத் தொகுப்பு.
         இத்த புத்தகத்தை காதலின் எந்த நிலையில் இருப்பவர்களும் அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்யா என ஒதுங்கிச் செல்பவர்களும் கூட படித்துச் சிலகாகிக்க முடியும்.
       ‎காதல் நிராகரிப்பு ,பிரிவு,அதன் பின்னான சந்திப்பு என காதலின் அனைத்து நிலைகளையும் மகிழ்வாய் கொண்டாட மனதை பண்படுத்தும் வரிகள்.
       ‎lite wait புத்தகம்தான் என்றாலும் காதல் தோல்வியென்றாலே வன்மம் சுமக்கத்தயாரகும் அல்லது காதலின் சில படிநிலைகளை கடக்க திணரும் பதின்பருவத்தினருக்கும் நல்லதொரு வழிகாட்டி .
    ‎உங்கள் வாழ்வின் பனிப்பிரதேசங்களின் குளிர்மையை மீண்டும் அசைபோட ஆசையிருந்தால் ஒருமுறை இந்த ப் புத்தகத்தை புரட்டி விடுங்கள்.
    ‎
புத்தகத்திலிருந்து...

/தளிர்தலைக் கொண்டாடி உதிர்தலை அனுமதிக்கும் பக்குவமெல்லாம் இருக்கத்தான் செய்கிறது, ஆயினும் உன் பச்சை மட்டுமே பசுமையெனப் பதிந்து போயிற்று/

/உள்ளங்காலை நனைக்கும் அளவிலான சிறு நீரோட்டமொன்று என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறது நின்று ரசித்து விளையாடி குளிர்கண்டு ஈரப்பாதச் சுருக்கங்களோடு கடந்து சென்றாய் நீ பின்னொருநாள் அஞ்சல் செய்தாய் இன்னுமுன் பாதங்கள் ஈரமாகவே இருப்பதாக. பேரன்பின் ஆதிஊற்று!/

/உடன்வருதல் உயிராயிருத்தல் துணைநிற்றல் போகவிடுதல் எல்லாம் இருத்தலின் கூறுகள். பிணைமானின் நீரிட்ட கண்களில் கலங்கலாய் நீங்கள் தெரிகின்ற அன்றறியுங்கள் காதலென்பது துளிக்கண்ணீர் மட்டுமே./

    ‎பி.கு புத்தகம் கிண்டிலில் மட்டும் கிடைக்கிறது

வாழ்த்துகள் Karthik

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை